தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மத்திய அரசு நோட்டரி பப்ளிக் ஆனார் கோவை வழக்கறிஞர் ஜி.விவேக்!

மத்திய அரசு நோட்டரி பப்ளிக் ஆனார் கோவை வழக்கறிஞர் ஜி.விவேக்!

Radheyan 20 Mar 2026 | 06:27 PM
பகிர்:

கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு,G.விவேக் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சட்ட அமைச்சகம்  கடந்த வாரம் வெளியிட்ட பட்டியல்படி  தமிழகத்தைச் சேர்ந்த 3617 வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுபற்றிய மேலதிக விவரம் வருமாறு, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள இராஜக்காள்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர் திரு. G.விவேக். தற்போது கோவை நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் விவேக், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துவருகிறார். இவர் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் அங்கீகாரத்திற்காக 2021-ல் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியல்படி, தமிழகத்தைச் சேர்ந்த G.விவேக் உள்ளிட்ட 3617 வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அந்தஸ்து வழங்கியுள்ளது.

நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற்றுள்ள வழக்கறிஞர் விவேக் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், சட்ட ஆலோசகருமான திரு.ஜி.ஆனந்தகுமார் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி இந்த ஆண்டு மட்டும் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த நால்வர் மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற்றுள்ளது தெரியவருகிறது. இதனையடுத்து விவேக்கிற்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு G.Vivek thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண