🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்தியா - ரஷ்யா கூட்டு - அமெரிக்கா டாலருக்கு ஆப்பு!

கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற 'இந்திய - ரஷ்ய மூலதனச் சந்தை ஒருங்கிணைப்பு மன்றத்தில்' (Russia-India Capital Markets Integration Forum) முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், உலகப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே மாற்றியமைப்பதாக உள்ளன. 

ரஷ்யப் பொருளாதார நிபுணர் Sergey Glazyev விடுத்த அழைப்பு, வெறும் வர்த்தக ஒப்பந்தமல்ல, அது மேற்கத்திய நாடுகளின் நிதி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடப்பட்ட வெளிப்படையான போர் பிரகடனம் என்பதே சரி. 

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்குப் பணியாமல் இருக்க, இந்தியாவும் ரஷ்யாவும் தங்களின் தேசிய நாணயங்களிலேயே (National Currencies) தற்சமயம் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன. 

தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 96% டாலர் இல்லாமலேயே நடைபெறுகிறது என்பது ஒரு வரலாற்றுச் சாதனை. 

இது வெறும் தொடக்கம்தான். அடுத்த கட்டமாக, இரு நாடுகளின் பணப்பரிமாற்ற அமைப்புகளை ஒன்றிணைப்பதும், எல்லை கடந்த வர்த்தகத்திற்கு டிஜிட்டல் நாணயங்களை (Digital Currencies) அறிமுகப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இதன் மூலம், டாலர் மாற்றத்திற்காக (Currency Conversion) செலவிடப்படும் பெரும் தொகையும் காலதாமதமும் தவிர்க்கப்பட்டு, வர்த்தகம் இன்னும் வேகமெடுக்கும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே உற்று நோக்கும் வேளையில், குஜராத்தின் GIFT City-யில் ரஷ்ய வங்கிகள் தங்களின் கிளைகளைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இது வெறும் வங்கிச் சேவை அல்ல , இது ஆசியாவிற்கான ஒரு புதிய நிதி நுழைவாயில்.

 'பெட்ரோ டாலர்' (Petrodollar) கட்டமைப்பை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, $68 பில்லியன் மதிப்பிலான வர்த்தகத்தை ரூபாய் மற்றும் ரூபிளில் கையாளுவதன் மூலம், அமெரிக்கத் கருவூலத்தின் (U.S. Treasury) கண்காணிப்பில் இருந்து இந்த இரு நாடுகளும் விலகியுள்ளன. 

2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் வர்த்தகம் என்ற இலக்கை எட்ட, சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) போன்ற புதிய வர்த்தகப் பாதைகளும் இந்த நிதி ஒருங்கிணைப்புக்கு பக்கபலமாக அமைகின்றன.

கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியாவும் ரஷ்யாவும் கவலைப்படுவதில்லை. காரணம், அவர்கள் டாலரின் விலையைச் சார்ந்திருக்காமல், ரூபாய் - ரூபிள் (Rupee-Rouble Settlement) முறையிலேயே சுமார் 68 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர். 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் எண்ணெயை வாங்குவதும், அதற்குத் தனது சொந்த நாணயத்தில் பணம் செலுத்துவதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை (Sanctions) அர்த்தமற்றதாக்கியுள்ளது. 

இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் உலகெங்கும் செலுத்தி வந்த மறைமுகக் கட்டுப்பாடு தற்போது தளர்ந்து வருகிறது. அமெரிக்கா தனது மூலதனத்தை போர்களுக்காகவும் ஆயுதங்களுக்காகவும் செலவிட்டு வரும் வேளையில், இந்தியாவும் ரஷ்யாவும் தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் சந்தைகளை (Capital Markets) இணைப்பதில் கவனம் செலுத்துகின்றன. 

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வர்த்தகம் திரும்புவதை உணர்ந்துள்ள இந்தியா, ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 

Trust and Transparency அடிப்படையில் கட்டமைக்கப்படும் இந்த புதிய நிதி அமைப்பு, உலகளாவிய டாலர் ஆதிக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி ; முகிந்தன் 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved