"உள்ளாட்சி பிரதிநிதிகள்-அரசியல் கட்சி தலைவர்களே! மாணவ-மாணவிகள் DNT-சான்றிதழ் பெற உதவிடுக!!
அன்புள்ள இராஜகம்பள சமுதாய ஊராட்சி மன்றத் தலைவர்களே, உள்ளாட்சி பிரதிநிதிகளே, அரசியல்கட்சி தலைவர்களே வணக்கம்.
வழிகாட்டும் நாமக்கல் மாவட்டம்.
தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் மக்கள் DNT சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்கள். DNT- சான்றிதழ் பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. (இதுபற்றி விரிவான தகவல்களை அறிய நீலநிற எழுத்தில் " செய்தி துணுக்குகள்" விரல் வைக்கவும்) தமிழக அரசும்கூட சமீபத்தில் கொரோனா நிவாரணநிதியாக ரூ.2000/- வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திற்கு மிக அத்தியவசியமான DNT சான்றிதழை, நமது சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பொதுவாழ்வில் உள்ளவர்கள் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் அம்மாவட்ட மாணவ-மாணவியருக்கு DNT-சான்றிதழ் பெறும் முயற்சி கடந்த 22.05.2020-ல் தொடங்கப்பட்டு, இன்று 16.06.2020-ல், திரு.பாலாஜி மற்றும் திரு.நா.ப.விக்னேஷ் ஆகியோர்களுக்கு பெற்றதின் மூலம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுதும் சான்றிதழ் பெறும் பணியை தீவிரப்படுத்துகிறார்கள் "அறக்கட்டளை நிர்வாகிகள்".
இதுபற்றி தகவல்/ஆலோசனை வேண்டுவோர் : 1. திரு.பழனிச்சாமி (அறக்கட்டளை தலைவர், நாமக்கல் -9976064000) 2.திரு.மணி (Rtrd VAO-9894099124) ஆகியோரையோ அல்லது தொட்டிய நாயக்கர் இணையதள எண்ணான 7395988767 எண்ணிலோ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.


மேலே திரு.பாலாஜி மற்றும் திரு.விக்னேஷ் அவர்களின் DNT சான்றிதழ் இணைப்பட்டுள்ளது.
இவண்:
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

