🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஓ.பி.சி.இடஒதுக்கீடு விவகாரம் - நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் அமைப்புகள் மனு.

இன்று (10.08.2020)  நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவ படிப்பில் UG/PG வகுப்பில் 69% இட ஒதுக்கீடு சட்டத்தின்படி இந்த ஆண்டே ஒதுக்க வேண்டும் எனவும், அதற்கான சட்ட ஆதாரங்களுடன் மனு அளிக்கப்பட்டது. மேலும் 2021-ல் O.B.C மக்கள் தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்ற (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை  வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முன்னதாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சின்ராஜ் அவர்களிடமும் இதேகோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி.உடனான இந்த சந்திப்பில் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் திரு.M.பழனிசாமி, மூத்த வழக்கறிஞர் திரு.B. பழனிசாமி, விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜ், மு.கிராம நிர்வாக அதிகாரி. திரு.மணி, அ.பாலப்பட்டி திரு.சின்னுசாமி மற்றும் மேற்கு பாலப்படி திரு.ரமேஷ்  ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved