🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப்போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

சமூக ஊடகங்களில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களையும், நாயுடு நாயக்கர் சமூகத்தினரையும் தவறாக சித்தரிக்கும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி, அனைத்து மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடத்தில் நாயக்கர் நாயுடு  சமுதாய தலைவர்கள் தொடர்ந்து புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், வரும் திங்கள் கிழமை  7-ம் தேதி காலை 10.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விடுதலைக்களம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர்  கொ. நாகராஜன் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தெலுங்கு சம்மேளன மாநில தலைவர் திரு.வெ. வேங்கடவிஜயன் முன்னிலை வைக்கின்றார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.கே.சி. திருமாறன் ஜி தொடங்கி வைக்கிறார். தேசிய செட்டியார் பேரவை நிறுவனத்தலைவர் திரு.பி.எல்.ஏ . ஜெகநாத் மிஸ்ரா முடித்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் திரு.என்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு, தமிழ்நாடு கம்மா நாயுடு எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் திரு.எஸ். செல்வராஜ், விஜய நகர புரட்சி படை நிறுவனர். வைகை பாண்டியன், நாயுடு மகாஜன சங்க மாநில பொருளாளர்  டாக்டர். சன்னாசி, வெலம நாயுடு சங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.வெங்கட்ட ராமன், தமிழக வெலம நாயுடு இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் திரு.ஏ. காளிதாஸ் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் திரு.என். சிவன்ராஜ் நாயக்கர், நாயுடு மகாஜன சங்க மதுரை மாவட்ட தலைவர் திரு.சப்னா மகாராஜன், தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில இளைஞர் அணித்தலைவர் திரு.எஸ்.எஸ்.பிரேம்குமார், நாயக்கர் நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் திரு.மெய். தனபாலன், தொழுவா நாயக்கர் மகாஜன சங்க மாநிலத் தலைவர் திரு.எஸ்.ஏ. கட்டபொம்மு ராஜா, மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழக நிறுவனத் தலைவர் திரு.வி.கே. சுந்தர்ராஜன், தெலுங்கர் மகாஜன சங்க மாநிலத்தலைவர் திரு.ஜி.வி. பாலமுகருகன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்டத்து தலைவர் திரு.விக்னேஷ்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். எனவே அனைவரும் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைக்களம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved