🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்றத்திலும் வெற்றியை உறுதி செய்ய நிதி உதவி செய்திடுக!

கம்பளத்தாருக்கு வணக்கம். நமது தொட்டியநாயக்கர் (சில்லவார், கொல்லவார்,  தோக்கலவார், இராஜகம்பளம், தொழுவ நாயக்கர் மற்றும் எர்ர கொல்லா) உள்ளிட்ட 116 சாதிகளுக்கு 1989-முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டுவந்த 20 விழுக்காடு MBC இட ஒதுக்கீட்டால், நமது சமுதாயத்தில் மிகப்பெரிய கல்விப்புரட்சி ஏற்பட்டுள்ளது நிதர்சனமான உண்மை. இன்று நமது சமுதாயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு  பட்டதாரி இருப்பதை யாரும் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எண்ணற்ற பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் இன்று நமது சமுதாயத்தில் இருப்பதையும், அவர்களில் பலர் அயல்நாடுகளில் பணியாற்றி வருவதையும் கண்கூடாக பார்த்துவருகிறோம். நேற்றுவரை விவசாயியாக, விவசாய கூலிகளாக, ஆடு,மாடு மேய்ப்பவர்களாக தலைமுறை தலைமுறையாக விடியலின் வெளிச்சம் எட்டாதவர்களின் வீடுகளிலெல்லாம் கல்வி எனும் வெளிச்சம் பாய்ச்சி, குடும்பம் தோறும் ஒரு மென்பொருள் பொறியாளரை உருவாக்கி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துபோன பெற்றோர்களுக்கு ஓய்வையும், நிம்மதியையும் அளித்துள்ளது என்பதை மனசாட்சியுள்ள பெற்றோர்களும் ஒப்புக்கொள்வர்.

முடியரசில் போர்க்களத்தில் வாள் ஏந்திய கூட்டம், குடியரசில் அறிவாயுதம் ஏந்த துணைநின்றது கல்வி. அந்தக்கல்வி நமக்கு கிடைத்திட அடிப்படையாக இருந்ததும், இருக்கப்போவதும் இடஒதுக்கீடு எனும் அஸ்திவாரம். 20 விழுக்காடு MBC இடஒதுக்கீடு என்பது தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 116 சமூகங்களுக்கான அஸ்திவாரம். அதில் அவரவர் சமுதாயங்கள் தங்கள் கோபுரங்களை கட்டிக்கொள்ள உரிமையுண்டு.  ஆனால் அரசியல் அதிகாரப்பசியில் இருப்பவர்கள், 115 சாதிகளை அஸ்திவாரமாக்கிவிட்டு ஒரு சாதி மட்டும் கோபுரம் கட்டிக்கொள்ளட்டும் என்பதுதான் மொத்தமுள்ள 20 விழுக்காடு MBC இட ஒதுக்கீட்டில் ஒரு சாதிக்கு மட்டும் பாதிக்கும் மேலாக 10.5 விழுக்காடு பங்கு வைத்தது. 

இந்த அரசியல் சதியை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்கள், இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை எடுத்துரைத்து உயர்நீதி மன்றத்தின் துணையோடு அறுத்தெறிந்துள்ளோம். வஞ்சகர்களை உயர்நீதிமன்றம் தலையில் குட்டியதை பொருட்படுத்தாமல் அதிகார பலம், பணபலம் இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அடித்து ஆடியவர்களை நாம் அவுட் ஆக்கிவிட்டோம். களத்தில் உள்ள அம்பயர்  அவுட் கொடுத்து விட்டார். DRS-லும் தெளிவாக தெரிகிறது. மூன்றாவது நடுவர் அவுட் என்று உறுதி செய்யவேண்டியது தான் பாக்கி. அங்குதான் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறது குள்ளநரிக்கூட்டம். காரணம் மிதமிஞ்சியுள்ள பணபலமும்,  அதிகார பலமும் அவர்களுக்கு அந்த துணிச்சலை தருகிறது.  நாமோ சவலைப்பிள்ளைகளாக உள்ளோம். அதுவே அவர்கள் தங்களுக்கான பலமாக பார்க்கிறார்கள். 

அவர்கள் அப்படி நினைப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்திட ஆகும் செலவு.  இடஒதுக்கீடு போன்ற மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம் சாமானியன் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாதது. ஒரு வழக்கு விசாரணையில் ஒருமுறை ஆஜராகி வாதிட சாதாரண கட்டணம் 6 முதல் 25 லட்சம் வரை. வாதம் அதிகபட்சம் 5 முதல் 45 நிமிடமே நடக்கலாம். 

இந்த இடத்தில்தான் நாம் தோற்போம் என்று எதிரிகள் கணக்கிடுகிறார்கள். ஆனால் நாம் நியாயத்தின் பக்கம் நின்று போராடுகிறோம். நமது பக்க நியாயத்தை சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. தர்மத்தை நிலைநாட்ட கட்டணம் வாங்காமல் வழக்காடும் வழக்கறிஞர்கள் பலர் உண்டு. நமக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடி நீதியை பெற்றுத்தந்தவர்களும் அப்படிப்பட்டவர்களே. 

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் வந்தவுடன் உச்சநீதிமன்றத்தை அணுகிய வகையிலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கை நடத்த உதவும் வகையிலும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் தனது பங்களிப்பாக ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. 

உறவுகளுக்கு ஒரு சந்தேகம் வரலாம். தொட்டிய நாயக்கர் சமுதாயமே ஒரு லட்சம் வழங்கியது என்றால், 115 சமுதாயங்களுக்கு 1.15 கோடி வருமே என்று. மேலோட்டமாக பார்த்தால்  உங்கள் கணக்கு சரிதான். ஆனால் இந்த 115 சமுதாயங்களில் வண்ணார், நாவிதர், பண்டாரம் போன்ற சேவை சமூகங்கள், நரிக்குறவர், போயர், மீனவர் போன்ற மிக மிக பின்தங்கிய சமூகங்கள்,  இடஒதுக்கீடு குறித்தான புரிதல், விழிப்புணர்வு இல்லாத சிறு,குறு சமூகங்கள் பல உள்ளன. ஆகையால் இதில் கணக்குப்பார்த்து பங்கீடு செய்யாமல், நம்மை விட பின்தங்கிய சமுகங்களுக்கும் நியாயம் பெற்றுத்தரும் நாயக்கர் சமூகமாக இருப்பது நமது கடமை. 

பல தலைமுறைகளாக சுரண்டப்பட்ட குடும்பங்கள், சமுதாயங்கள் கூட கடந்த சில பத்தாண்டுகளில் கிடைத்த கல்வியால் ஈட்டிய தற்போதைய பொருளாதார நிலையை நினைத்து "இடஒதுக்கீடே தேவையில்லை" என்ற  இறுமாப்பில் இருப்பர்கள் வரலாறை பின்னோக்கிப்பார்க்காத மூடர் கூட்டம். நமக்கு கீழே இருப்பவர்களை கைதுக்கி விட வேண்டும் என்ற அக்கறையில்லாத சுயநலக்கூட்டம், எல்லா சமுதாயத்திலும் பல்கிப்பெருகியதே, இடஒதுக்கீட்டை ருசித்துப்பழகியவர்கள் மொத்தமாக சுருட்டிக்கொள்ள முயல்வதற்கு உந்து சக்தியாக உள்ளது. இன்றைய கொரோனா பெருந்தொற்று பல கோடீஸ்வரர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பதை சமூகம் குறித்து ஒருசில நிமிடங்களாவது சிந்திப்பவர்கள் அறிந்ததே. இன்றைய சந்தைப்பொருளாதர உலகில் கீழ் இருப்பவர்கள் மேலே செல்வதும், மேலே இருப்பவர்கள் கீழே தூக்கி எறியப்படுவதும் நொடிப்பொழுதில் நடக்கும் அதிசயம். இப்படியான சூழலில் அக்குடும்பப்பிள்ளைகளுக்கான கடைசி புகழிடமாக இருந்து காப்பது இடஒதுக்கீட்டு உரிமை மட்டுமே. 

எனவே "நமது" என்று பொதுநலமாக யோசிக்கும் பலக்கமில்லாதவர்களும்,  உங்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்கால நலன்காக்க, உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதியை உச்சநீதிமன்றத்தில் பேணிக்காப்பது அவசியம்.

இந்த இடஒதுக்கீடு வழக்கில் நம் சமுதாயம் இணைந்து பணியாற்றிவரும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொள்ள, தொட்டிய நாயக்கர் சமுதாயத்திடம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ட தொகை ரூ.200000/- (ரூபாய் இரண்டு லட்சம்). பெரிய மனதுள்ள நாயக்கர்களிடம் குறைந்த தொகையே எதிர்பார்க்கிறது சமூகநீதி கூட்டமைப்பு. 

தொட்டிய நாயக்கர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பினை  சென்னை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஏற்றுள்ளன. 

இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கிற்கு நிதியுதவி அளிக்க முன்வருபவர்கள், தங்களுக்கு பரிட்சையமான அந்தந்த அமைப்பின் மூலம் ரொக்கம்/வங்கிப்பரிவர்த்தனை மூலமோ அல்லது Name: Veerapandia Kattabomman Rajakambala Samudhaya Nalasangam SB.A/C No: 742532769 IFSC : IDIB000R016,  Indian Bank, Redhills, வங்கிக்கணக்கிற்கு ரொக்கமாகவோ  NEFT, GPay, PhonePe காசோலையாகவோ வழங்கலாம். 

நன்கொடையாளர்கள் தங்கள் செலுத்திய தொகை மற்றும் பெயர், ஊர் விபரங்களை 7395988767 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் மூலம் தெரிவிப்பது நிதியுதவி அளிப்பவர்கள் பட்டியலை வெளியிட உதவிகரமாக இருக்கும்.


மேலும் விபரங்களுக்கு

1. திரு.P.இராமராஜ் - 9842181004 (இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை).

2. திரு.மு.பழனிச்சாமி - 9976064000 (தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை)

3. திரு.S.இராமராஜ் - 9442646284 (வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved