🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சீமான்... பேசுவது தமிழ்தேசியம்! செய்வது புரோக்கர் வேலையா?-பாகம் 2

1996 ஆம் ஆண்டு நடிகர் பிரவு நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீமான், 1998-இல் மீண்டும் பிரவு நடிப்பில் வெளியான இனியவளே, 2000 ஆம் ஆண்டு சத்தியராஜ் நடிப்பில் வெளியான வீரநடை என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களில், முதல்படமான பாஞ்சாலங்குறிச்சி (மாவீரன் கட்டபொம்மன் கோட்டைகட்டி வாழ்ந்த புனித மண்) தவிர, மற்ற இரு படங்களும் படுதோல்வியைத் தழுவியது. இதனால் சினிமா வட்டாரத்தில் சீண்டுவாரில்லாமல் போன சீமான், விருகம்பாக்கம் பிராந்திக்கடைப் பக்கம் வருவோர் போவோரிடம் சரக்குக்காக கையேந்தி, வயிறு முட்டக்குடித்துவிட்டு, இரவெல்லாம் அருகிலுள்ள சுடுகாட்டுப்பக்கம் படுத்துக்கிடந்ததைப் பார்த்த சாட்சிகள் பலர், இன்றும் அதை நினைவு கூர்வதுண்டு. 

ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் 2006-இல் சீமான் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியானது தம்பி திரைப்படம். அதுவரை சாக்லேட் பாயாக அறியப்பட்ட மாதவன் ஆக்சன் ஹீரோவாக நடித்து சுமாராக ஓடிய தோல்விப் படம். இப்படத்தின் வசனங்கள் கவனத்தைப்பெறவே, தமிழக அரசின் சிறந்த வசனத்திற்கான விருதின் மூலம் மீண்டும் திரைத்துறையில் வெளிச்சம் கிட்டியது. இதனையடுத்து 2008-இல் மீண்டும் மாதவன் நடிப்பில் வெளியானது வாழ்த்துக்கள் திரைப்படம். முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தை கலப்பில்லாத முதல் தமிழ்படம் என்ற விளம்பரம் மூலம் எதிர்பார்ப்பை எகிறச்செய்து கல்லா கட்ட நினைத்த சீமானுக்கு படம் அட்டர் பிளாப் ஆகி சீமானின் திரைப்பட  இயக்குநர் வாழ்க்கைக்கு முடிவு கட்டியது.

முதல் ரவுண்ட் தோல்வியிலேயே சோற்றுக்கு அல்லாடிய ஞாபகம் சீமானுக்கு வந்திருக்க வேண்டும். இனி திரைத்துறையில் நீடிக்கும் அளவிற்கு சரக்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு மாற்று வழியைத் தேடினார். அப்போது தான், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்திய விவகாரத்தில், ராஜ்குமாரை விடுவிக்கும் விவகாரத்தில் தலைமையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட கொளத்தூர் மணி, அதேபோல் திக விலிருந்து வெளியேறி தனி இயக்கம் நடத்தி வந்த கோவை இராமகிருஷ்ணன், திருவாரூர் தங்கராசு, விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக இணைந்து உருவாக்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. கொளத்தூர் மணியோடு ஏற்பட்ட அறிமுகம் காரணமாக பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 

கட்டபொம்மனாரின் பாஞ்சை மண்ணின் பெயரில் படமெடுத்து வாழ்க்கையை தொடங்கிய சீமான், பின்னாட்களில் கட்டபொம்மனையே இழிவு படுத்தி பேசிவருவதும், பெரியார் பெயரில் மேடையில் பேசத் தொடங்கிய சீமான் பெரியாரை இகழ்ந்து பேசிவருவதும் ஒரு சாண் வயிற்றுக்குத்தான் என்பதை தோலுரிப்போம். 

தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved