ஒற்றை துப்பாக்கிக்குண்டால் மாறிய உலக வரலாறு!
1877 ஆம் ஆண்டில் டோன்கின், அன்னம், கொச்சி சீனா மற்றும் கம்போடியா உள்ளிட்ட பிரெஞ்சு இந்தோசீனா நிறுவப்பட்டதன் மூலம் வியட்நாம் ஒரு பிரெஞ்சு காலனியாக மாறியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய துருப்புக்கள் வியட்நாமை ஆக்கிரமித்தபோது பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனியின் மீதான கட்டுப்பாட்டை சிறிது காலம் இழந்தனர் .
ஜப்பானும் பிரான்சும் வியட்நாமுக்காகப் போரிட்டபோது, "லெனினின் போல்ஷிவிக் புரட்சியால்" ஈர்க்கப்பட்ட புரட்சிகரத் தலைவரான ஹோ சி மின் தலைமையில் ஒரு சுதந்திர இயக்கம் உருவானது. 1941 மே மாதம் வியட் மின் என்று அழைக்கப்படும் வியட்நாமின் சுதந்திரக் கழகத்தை ஹோ சி மின் நிறுவினார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2, 1945 அன்று ஹோ சி மின் பிரான்சிடமிருந்து வியட்நாம் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார் . பிரெஞ்சுக்காரர்கள் அவரது திட்டத்தை நிராகரித்தபோது, வியட் மின் ஒரு சுதந்திர வியட்நாமிற்காகப் போராட கொரில்லாப் போரை நாடியது. தளபதி வோ நுயன் கியாப் தலைமையிலான பிரெஞ்சுப்படை வியட்நாமில் தோல்வியை சந்தித்தது. வியட்நாம் ஹோ சி மின் தலைமையில் கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடக்கூடாது என்று பயந்த அமெரிக்கா, வியட்நாம் விவகாரத்தில் மூக்கை நுழைத்தது.
அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலக ஆதிக்கத்திற்காகப் போராடியபோது, இருவல்லரசுகளுக்கான பனிப்போரில் வியட்நாம் ஒரு போர்க்களமாக இருந்தது.
01-09-1955 முதல் 30-04-1975 வரை நடைபெற்ற அமெரிக்க - வியட்நாம் யுத்தத்தில் உலக வல்லரசான அமெரிக்கா படுதோல்வியடைந்தது. கிட்டத்தட்ட 20 வருட நேரடி யுத்தத்தில் அமெரிக்காவை, நிர்வாணமாக்கி ஓட விட்டது வியட்நாம்.
உலகத்திற்கே தான் மட்டுமே தாதா என அறிவிக்காமல் அராஜகம் செய்து வரும் அமெரிக்காவை வியட்நாமில் விரட்டி விரட்டி அடித்தவர் ஹோ சி மின்.
ஹோ சி மின் குடும்பம் பிரான்சில் வசித்து வந்தது. அவரின் சகோதரர் பிரான்ஸ் - வியட்நாம் போரில் பிரான்சுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இது பொறுக்காத பிரெஞ்ச் அதிகார வர்க்கம் அவரை சுட்டுக்கொன்றது. அப்போது அங்கிருந்த ஹோ சி மின்னை பார்த்து, 'இவனை பாத்தா இன்னும் ரெண்டு நாள்ல செத்து போற மாதிரி இருக்கான். இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது' என அலட்சியமாக விட்டுச்சென்றனர். அந்த அலட்சியம்தான் அமெரிக்காவுக்கு ஆப்படித்தது.
துப்பாக்கியை நிறுத்தி வைத்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் தேகம்தான் ஹோ சி மின்னுக்கு. ஆனால் ஆழ்ந்த, அரசியல் புலமையும், நுண்ணறிவும், போர்த்தந்திரமும் கொண்ட காரணத்தால் வியட்நாம் படைகளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு தேடி வந்தது.
களத்தில் நின்று மக்களை போரில் பங்கெடுக்க வைத்ததால் வெற்றியும் வசப்பட்டது.
7 மில்லியன் டன் எடையுள்ள குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மீது வீசியது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசியது இரண்டு மில்லியன் டன் குண்டுகள். அதைவிட மூன்று மடங்குக்கு மேல் வீசியும் அமெரிக்காவால் வியட்நாமை அடிபணிய வைக்க முடியவில்லை.
58,220 அமெரிக்கர்கள் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்படார்கள். 1,50,000 பேர் காயம் பட்டார்கள். 21,000 பேர் நிரந்தரமாக கை,கால் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலியில் வலம் வந்தார்கள்.
ஹோ சி மின், படை பலம் மிக்க அமெரிக்க ராணுவத்தை வீழ்த்தியது எப்படி?.
தன் மக்கள் அனைவரையும் போராளியாக்கி களத்தில் விட்டார். லட்சக்கணக்கான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இறங்கி கொரொனாவுக்கு எதிராக போராடும் போது தொலைக்காட்சியில் மட்டும் மக்கள் முன் தோன்றும் அதிபராக ஹோ சி மின் இருக்கவில்லை.

மக்களோடு மக்களாய் கலந்து நின்றார். போர் புரிந்தார். வென்றார்.
தன் நாட்டு மக்களை கை தட்டச் சொல்லவில்லை. வெளக்கு பிடிக்கச் சொல்லவில்லை.
ஆனால், விவசாயம் பார்க்கச்சொன்னார்.
அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மக்கள் விவசாயம் செய்தார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச்சுட்டார்கள். சுடுவற்கு விவசாயிகள் பயிற்சி பெற்று இருந்தார்கள்.
கெரில்லா யுத்தத்தில் ஹோ சி மின் நிபுணத்துவம் கொண்டிருந்தார். அமெரிக்கா விமானங்களில் இருந்து பாம் வீசும் போது பதுங்கு குழிக்குள் பதுங்குவர். பதிலுக்கு பாம்புகளை அமெரிக்க ராணுவ முகாம்களில் வீசுவார்கள். அலறி ஓடும் அமெரிக்கர்களை குறி வைத்து சுட்டுப் பரலோகம் அனுப்பி வைப்பார்கள் வியட்நாமியர்கள்.
விஷத் தவளைகளின் விஷம் தடவிய அம்புகள் பாய்ந்த நொடியில் உயிர் விட்ட அமெரிக்கர்கள் அநேகர்.
வியட்நாமின் அடர்ந்த காடுகள் கூட அமெரிக்கர்களுக்கு எதிராக சமர் புரிந்தது. அமெரிக்கர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை பார்த்து அமெரிக்காவில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பணிந்தது அமெரிக்கா.
சாமாதானம் பேச வந்த அமெரிக்க படைத்தளபதி மெடல்கள் பளபளக்க ராணுவ உடையில் மிடுக்காக வந்தார்.ஹோ சி மின் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து லுங்கி கட்டிக்கொண்டு ஆயிரம் பொத்தல்கள் நிறைந்த பனியன் அணிந்து வந்தார்.
மாவீரர்களுக்கு மரணமில்லை !
நன்றி: சோமசுந்தரம்.

