ஈரான் - அமெரிக்கா போர் இறுதி வெற்றி யாருக்கு?
ஈரான் யுத்த தந்திரோபாயத்தில் மட்டுமன்றி அரசியல் இராஜதந்திர தந்திரோபாயத்திலும் வெற்றியீட்டிக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பலம் வாய்ந்த இராணுவத்தைக் கொண்ட, டிரில்லியன் கணக்கான டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளால் நசுக்கப்படும் ஈரானைப் போன்ற ஒரு நாட்டை எதிர்த்துப் போரிட்டு எப்படித் தோற்கும்?
மேலோட்டமாகப் பார்த்தால் இது எவராலும் நம்ப முடியாத கதையாகத் தோன்றும். ஆனால், நாம் இச்சம்பவங்களை உணர்ச்சிகரமாக நோக்காது, வெறும் செய்திகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது, தரவுகள் அத்துடன் 'கேம் தியரி' ஊடாக ஆராய்ந்தால், எமக்குத் தென்படும் யதார்த்தம் மிகவும் வித்தியாசமானதாக அத்துடன் ஆபத்தானதாக இருக்கிறது.
"Predictive History" என்று அழைக்கப்படும் பிரபல்யமான யூடியூப் தளத்தின் உரிமையாளரான பேராசிரியர் 'சியென்' (Professor Cien) நீண்ட காலத்திற்கு முன்னர், அதாவது 2024 ஆம் ஆண்டில் மூன்று பிரதான கணிப்புக்களைக் கூறினார்.
முதலாவது, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என்பது.
இரண்டாவது, அமெரிக்கா ஈரானுடன் யுத்தமொன்றைத் தொடங்கும் என்பது.
இவை இரண்டுமே இப்போது உண்மையாகிவிட்டன.
அவருடைய மூன்றாவது அத்துடன் மிக ஆபத்தான கணிப்பு என்னவென்றால், அமெரிக்கா இந்த யுத்தத்தில் தோற்றுப்போகும். அத்துடன் அதனூடாக உலக அதிகாரச் சமநிலை முழுமையாக மாறிவிடும் என்பதுதான்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுக்கு முன்னால் உண்மையில் எப்படி மண்டியிடுகிறது. அத்துடன் அதற்குப் பாதிப்பைச் செலுத்தும் உண்மையான காரணங்கள் எவை என்று பாப்போம்,
ஈரானின் 50,000 டாலர் ட்ரோன் Vs அமெரிக்காவின் 1 மில்லியன் டாலர் ஏவுகணை.
அமெரிக்க இராணுவம் உலகின் மிக அதிக செலவு செய்யும் இராணுவமென்பது தெரியும். ஆனால், அவர்களின் போர் உத்திகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த 'பனிப்போர்' (Cold War) காலத்திற்குப் பொருந்துமாறு அமைந்துள்ளன.
அந்தக் காலத்தில், அதாவது பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியத்துடன் அமெரிக்கா போர் புரிந்தது. உண்மையில் மோதிக்கொள்வதை விட, தமது ஆயுதங்களின் வலிமையைக் காட்டி மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே இருந்தது.
இங்கே உண்மையான கதையைச் சொன்னால், அமெரிக்க இராணுவத்தின் உயர் பதவிகள் மிகப்பெரிய ஊழல் வலையமைப்பாகும். அவர்களுக்குத் தேவை யுத்தங்களை வெல்வதல்ல, முடிந்தவரை பணத்தைச் செலவழித்து அதன் மூலம் கமிஷன் பெறுவதுதான்.
அமெரிக்க செனட் சபை அண்மையில் டிரம்ப்பின் யுத்த வலிமையைக் கட்டுப்படுத்தக் கொண்டு வந்த மசோதா தோல்வியடைந்தது அல்லவா? அது தோல்வியடைந்ததற்கும் காரணம், இந்த யுத்த உபகரணங்களை உருவாக்கும் நிறுவனங்களின் பங்குகளைப் பெரும்பான்மையான செனட் உறுப்பினர்கள் பெற்றிருப்பதுதான்.
யுத்தங்கள் இருக்கின்ற வரை அவர்களுக்கு இலாபம்தான். அதனால் அமெரிக்கா எப்போதும் உருவாக்கியது பார்ப்பதற்கு அழகாக, ஆனால் அதீத விலையுயர்ந்த, சிக்கலான ஆயுதங்களையே.
இன்று ஈரான் இந்த நிலையைத் தனது சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளது. ஈரான் பயன்படுத்துவது ஷாஹெட் (Shahed) போன்ற ட்ரோன்களை. ஒரு ட்ரோனை உருவாக்கச் செல்வது 35,000 டாலர் முதல் 50,000 டாலர் வரையிலான தொகையாகும்.
ஈரானால் ஒரு நாளைக்கு இவ்வாறான 500 ட்ரோன்களை உருவாக்க முடியும். அத்துடன் அவர்களிடத்தில் ஏற்கனவே 80,000க்கும் அதிகமான ட்ரோன் கையிருப்பு இருக்கிறது.
இந்த 50,000 டாலர் ட்ரோனை வீழ்த்த அமெரிக்கா பயன்படுத்துவது "தாட்" (THAAD - Terminal High Altitude Area Defense) அல்லது "பேட்ரியட்" (Patriot) போன்ற வான் பாதுகாப்புத் தொகுதிகள். இவற்றின் மூலம் அனுப்பப்படும் ஒரு இடைமறிப்பு ஏவுகணை (Interceptor Missile) ஒரு மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடையது. சில வேளைகளில் ஒரு ஈரானிய ட்ரோனை அல்லது ஏவுகணையை வீழ்த்த 11 அமெரிக்க ஏவுகணைகளை அனுப்ப வேண்டியுள்ளது.
நீங்களும் எண்ணற்ற முறை கண்டிருப்பீர்கள், ஈரான் அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்கள் அனைத்தையும் நாம் இடைமறித்தோம் என்று சொல்லிப் பலர் மகிழ்ச்சியடைவதை. ஆனால், இடைமறித்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டிலுமே உண்மையில் பொருளாதார ரீதியாக வெல்வது ஈரான் தான்.
யுத்த ஆய்வாளர் கேணல் டக்ளஸ் மெக்ரிகோர் (Col. Douglas McGregor) சுட்டிக்காட்டுவது போல, உக்ரைன் யுத்தத்துடன் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு முழுமையாகப் போல காலியாகிப் போயுள்ளது.
அவர்களிடம் இப்போது எஞ்சியிருப்பது 4,000 ஏவுகணைகள் போன்ற தொகையே. ஆனால் ஈரானிடம் 4,50,000க்கும் அதிகமான ஏவுகணைகள், அத்துடன் ட்ரோன் கையிருப்பு உள்ளது. ( இந்த ஈரானிய ஏவுகணைகளில் பல அமெரிக்க ஏவுகணைகள் அளவுக்கு வலிமையானவை அல்ல என்பது சரிதான்).
ஆனால் 50,000 டாலர் அச்சுறுத்தலை நிறுத்த 2-3 மில்லியன் டாலர் செலவழிக்கும் இந்த "சமச்சீரற்ற" யுத்தத்தை அமெரிக்காவால் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.
நீர்: மத்திய கிழக்கின் பேரழிவு ஆயுதம்.
இந்த யுத்தத்தின் பிரதான இலக்கு எண்ணெய் அல்லது இராணுவக் கூடங்கள் அல்ல, அது நீராகும். மத்திய கிழக்கில் இருப்பது மிகுந்த நீர் நெருக்கடியாகும் (Water Stress). 100% நீர் நெருக்கடி என்பது சூழலில் இருக்கும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.
ஆனால் தரவுகளின்படி எகிப்தின் நீர் அழுத்தம் 6,420%, சவூதி 883%, பஹ்ரைன் 4,000%, துபாய் 17,000% ஆகும்.
இப்போது சிந்தித்துப் பாருங்கள், ஒவ்வொரு நாட்டின் நீர் நெருக்கடியின் அளவை.
இந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் தங்களின் நீர் தேவையில் 60% ஐ நிறைவேற்றிக்கொள்வது கடல்நீரைச் சுத்திகரிக்கும் நிலையங்கள் மூலமாகும்.
ஈரானுக்கு இந்த நாடுகளுடன் பெரிய அளவில் யுத்தம் செய்ய வேண்டியதில்லை. 50,000 டாலர் ட்ரோனை அனுப்பி சவூதியின் ரியாத் நகரத்தில் அல்லது துபாயில் உள்ள Desalination Plant ஒன்றின் மீது தாக்கினால், 10 மில்லியன் அளவு மக்கள் தொகை கொண்ட அந்த நகரங்களுக்கு 2 வாரங்களில் தண்ணீர் இல்லாமல் போய், முழு நகரமும் பாலைவனமாகிவிடும்.
ஆனால் ஈரான் அப்படிச் செய்யுமா? மாட்டாதா? என்று நமக்குத் தெரியாது. யுத்தம் மேலும் மோசமடைந்தால் செய்யமாட்டார்கள் என்று நினைக்க முடியாது.
சமீப காலம் வரை உலகின் பாதுகாப்பான நகரம் என்று அழைக்கப்பட்ட 'துபாய்' முழுமையாகக் வீழ்ச்சியடைந்துள்ளது. (வெளியே பார்க்கக் கட்டிடங்கள் இடிந்து விழவில்லை, உள்ளுக்குள்).
இந்த துபாய் என்பது 90% வெளிநாட்டவர்கள் (Expats) இருக்கும் நகரமாகும். அவர்கள் அங்கே செல்வது வரியைக் குறைவாகச் செலுத்தி அல்லது செலுத்தாமலே பணம் சம்பாதிக்கவே ஒழிய யுத்தம் செய்ய அல்ல.
யுத்தம் வந்தவுடன் இந்தச் செல்வந்தர்கள் 250,000 டாலர் கொடுத்தாவது தனிப்பட்ட விமானங்களில் தப்பிச் செல்கிறார்கள். அரபு நாடுகளில் இருக்கும் இந்தச் செயற்கையான இருப்பு ஈரானால் இலகுவாக அழிக்கப்படக்கூடியது.
துபாயில் இருப்பவர்களுக்கே தெரியாத விஷயங்கள் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியும் என்று சிலர், சில இடங்களில் சொல்லியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
ஆனால் உண்மையில் இப்போரினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மட்டும் பங்குச் சந்தை 4.7% வீழ்ச்சியடைந்திருப்பது, துபாயில் இருப்பவர்களை விட வெளியே இருப்பவர்கள் சொன்ன கதை உண்மை என்பதை நிரூபிக்கிறது.
மறுபக்கம் அமெரிக்காவின் அத்துடன் இஸ்ரேலின் திட்டமும் ஈரானின் நீர் விநியோகங்களை அழிப்பதே ஆகும். ஏற்கனவே ஈரானின் ஊர்மியா ஏரி எனும் பாரிய உவர் நீர் ஏரி முழுமையாக வற்றிப்போயுள்ளது. ஈரான் என்பது பாரசீக இனத்தவர்களுக்கு மேலதிகமாக இன்னும் 10 க்கும் மேற்பட்ட இனங்கள் சேர்ந்து வாழும் நாடாகும். நீரைக் குறைத்தவுடன் இந்த இனங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஈரானைத் துண்டுகளாக உடைப்பதுதான் அமெரிக்கத் திட்டமாகும்.
ஹோர்முஸ் நீரிணைப்பும் பெட்ரோ - டாலர் முறை வீழ்ச்சியும்:
புவியியல் ரீதியாக எடுத்தால் ஈரான் என்பது அதிக எண்ணிக்கையிலான மலைத்தொடர்களால் சூழப்பட்ட இயற்கை கோட்டையாகும். அந்த மலைகளுக்குள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏவுகணைகளை ஒளிக்க அவர்களால் முடியும்.
ஆனால் அதற்கு எதிரான பக்கம் இருக்கும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் போன்ற நாடுகள் இருப்பது முழுமையாகத் திறந்த சமதரை பாலைவனத்திலாகும்.
இந்த வலயத்தில் இருக்கும் மிக முக்கியமான இடம் 33 கிலோமீட்டர் போன்ற அகலமான ஹோர்முஸ் நீரிணைப்பு ஆகும். உலகின் எண்ணெயில் 20% செல்வது இதன் வழியாகவே ஆகும்.
ஜப்பானுக்கு 75% எண்ணெய், இந்தியாவுக்கு 60%, சீனாவுக்கு 40% வருவது இங்கிருந்துதான். ஈரான் இப்போது இந்த கடல் வழியை அடைத்து முடித்துள்ளது.
ஜப்பானின் பிரதமரே சொல்லியிருக்கிறார் இந்த வழி அடைக்கப்பட்டால் ஜப்பானின் பொருளாதாரம் 8-9 மாதங்களில் முழுமையாக வீழ்ச்சியடையும் என்று.
அத்துடன் இந்த வளைகுடா நாடுகள் தங்களின் உணவுகளில் 80% ஐ இறக்குமதி செய்வது இந்த வழி மூலமாகும். வழி அடைக்கப்பட்டால் முழு வளைகுடா வலையமும் பசியால் மடியும்.
இது அமெரிக்காவிற்கு எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரம் தங்கியிருப்பது இராணுவத்துறையின் மீது அல்ல, பெட்ரோ - டாலர் முறை மீதாகும்.
வளைகுடா நாடுகள் எண்ணெய் விற்கும்போது பயன்படுத்துவது டாலர் என்று பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த வளைகுடா நாடுகள் அந்த எண்ணெய் விற்று வரும் அந்தப் பணத்தை மீண்டும் முதலீடு செய்வது அமெரிக்கப் பங்குச்சந்தையிலாகும்.
இந்த நாட்களில் அமெரிக்கப் பங்குச்சந்தையின் வளர்ச்சியில் கால் பங்கு தங்கியிருப்பது Nvidia, Microsoft, Apple, Google போன்ற AI நிறுவனங்கள் 7 இன் மீதாகும். இந்த AI நிறுவனங்களின் தரவு மையங்களுக்கு பில்லியன் கணக்கில் முதலீடு செய்வது இந்த வளைகுடா நாடுகளிலிருந்தாகும்.
ஈரான் முழு GCC வலையத்திலுமே எண்ணெய் விற்பதை முடக்கினால், அமெரிக்காவிற்குச் செல்லும் முதலீடுகள் நின்று AI Bubble வெடித்து அமெரிக்கப் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும். மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும்.
ஏற்கனவே அமெரிக்காவின் மொத்தக் கடன் பல டிரில்லியன் டாலர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
மத யுத்தம்:
யுத்தம் தொடங்கும்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் டெஹ்ரானுக்கு 'தலை துண்டிப்புத் தாக்குதல்' (Decapitation strike - தலைமைத்துவத்தை அழிக்கும் தாக்குதல்) தொடுத்தன.
இதன் மூலம் ஈரானின் உச்சத் தலைவர், அவரின் மகள், மருமகன் அத்துடன் பேரப்பிள்ளைகள் கூட உயிரிழந்தனர். அதனுடன் டெஹ்ரானின் தெற்குப் பகுதியில் ஒரு பாடசாலைக்குத் தொடுத்த தாக்குதலால் சிறிய பாடசாலைச் சிறுமிகள் 150 பேர் வரை உயிரிழந்தனர். மேற்கத்திய நாடுகள் நினைத்தன இது மிகப்பெரிய வெற்றி (Shock and Awe), இதன் மூலம் ஈரான் பயந்து வீழ்ச்சியடையும் என்று.
ஆனால் அவர்களின் கணிப்பு தவறாகப்போன இடம் இதுதான். ஷியா முஸ்லிம்களின் (ஈரானியர்களின்) மிக முக்கிய அடிப்படை 'தியாகம்' ஆகும்.
தலைவரின் இறப்புடன் இது இப்போது அரசியல் யுத்தமல்ல, மத யுத்தமாகும். "Great Satan" அமெரிக்காவிற்கு எதிராகச் செய்யும் புனித ஜிஹாத் யுத்தமாகும்.
உலகின் முஸ்லிம் மக்கள் தொகையில் ஷியாக்கள் 9% பேர் மட்டுமே இருந்தாலும், அவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.
ஈரானின் நோக்கமாக இருப்பது, தங்களின் தலைவரைக் கொன்றதை பயன்படுத்தி, உலகம் முழுவதும் இருக்கும் ஷியா மக்களை விழிப்படையச் செய்வதாகும். ஏற்கனவே பாகிஸ்தானில், ஈராக்கில் அமெரிக்கத் தூதரகங்களுக்குள் மக்கள் பாய்ந்து செல்வது அதனால்தான். அமெரிக்காவிற்கு ஆதரவான அரபு அரசாங்கங்களை (சவூதி, எகிப்து போன்றவை) கவிழ்த்து முழு இஸ்லாமிய உலகையும் ஒன்றிணைக்கும் "Pax Islamica" என்று சொல்லப்படும் ஆட்சியை உருவாக்குவதுதான் ஈரானின் இறுதி இலக்காகும்.
ஈரான் முதலில் தாக்குவது அமெரிக்காவின் 5 ஆவது கடற்படைத் தலைமையகம் இருக்கும் 'பஹ்ரைனை' ஆகும். ஏனெனில் பஹ்ரைனின் ஆட்சியாளர் சுன்னியாக இருந்தாலும், மக்கள் தொகையில் 50% க்கும் மேல் இருப்பது ஷியா இனத்தவர்களாவர். பஹ்ரைன் தான் முதலில் வீழும் அமெரிக்கக் கோட்டையாகும்.
இராணுவத் தளபதிகள் வேண்டாம் என்று சொல்லும்போது டிரம்ப் ஏன் இந்த யுத்தத்திற்குச் சென்றார் என்பதையும் பார்க்க வேண்டும்.
இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரிகள் கூடச் சொன்னார்கள் இதைச் செய்யாதீர்கள், நாம் இதற்குத் தயாராக இல்லை என்று.
அப்படியானால் டிரம்ப் ஏன் இந்த முடிவை எடுத்தார்? இதற்குப் பிரதான 3 காரணங்கள் உள்ளன:
முன்னர் நடத்திய வெனிசுலா அதிபர் மதுரோ (Maduro) கடத்தல் போன்ற சிறிய நடவடிக்கைகள் வெற்றியடைந்ததால் தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற அதீத அகங்காரம் டிரம்ப்பிற்கு வந்தது. வரலாற்றைப் பார்த்தால் ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கி அழிந்ததற்கும் இந்த அகங்காரமே காரணம்.
சவூதி அரேபியா டிரம்ப்பின் மருமகனான Jared Kushner இன் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர் கொடுத்தது. அத்துடன் இஸ்ரேலுக்குத் தீவிரமாக ஆதரவான Miriam Adelson டிரம்ப்பின் மூன்றாவது தேர்தல் போட்டிக்காக 250 மில்லியன் டாலர் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இந்த யுத்தத்திற்கு இடையில், டிரம்ப்பிற்கு காங்கிரஸிலிருந்து அவசர யுத்தச் சட்டங்களை பெற்றுத் தேர்தலைத் தள்ளிப்போட்டு, 3 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக வரப் பெரிய திட்டம் உள்ளது.
இந்த உலகத்தை ஆள்வது நாம் காணும் அரசியல்வாதிகள் அல்ல. ஜேசுயிட்டுகள் (Jesuits - வாட்டிக்கனை ஆளும்), Sabatean Frankists (நவீன இஸ்ரேலை ஆளும்) அத்துடன் பிரீமேசன்கள் (Freemasons - அமெரிக்கப் புலனாய்வுத் துறையை ஆளும்) போன்ற இரகசிய அமைப்புகள் நம்புவது, இந்த மத்திய கிழக்கு யுத்தம் மூலம் உலக அழிவைக் கொண்டு வந்து, இஸ்ரேலை மையமாகக் கொண்ட புதிய உலகம் உருவாக்க முடியும் என்று.
இது முழுமையாக அவர்கள் எழுதிய திரைக்கதையாகும். சில அமெரிக்க யுத்தவாதிகள் சொல்கிறார்கள் "எங்கள் கூடங்கள் இன்னும் வேலை செய்கின்றன, நாங்கள் தாக்குதல் பாணியில் இருக்கிறோம்" என்று.
ஆனால் தரையில் உண்மையான நிலை அதை விடவும் மிக ஆபத்தானது. கேணல் டக்ளஸ் மெக்ரிகோர் சுட்டிக்காட்டுவது போல, இப்போது வளைகுடா வலையத்தில் இருக்கும் அமெரிக்கக் கூடங்கள் அத்துடன் துறைமுகங்கள் அனைத்துமே பாதிப்படைந்து முடிந்துவிட்டன. அமெரிக்கக் கடற்படைக்கு வேறு துறைமுகங்களுக்குப் பின்வாங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சீனா மற்றும் ரஷ்யா நேரடியாக யுத்தத்திற்கு வரவில்லை என்றாலும், அவர்கள் ஈரானுக்குத் தேவையான அனைத்துச் செய்மதிப் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றனர். அதாவது அமெரிக்கக் கூடங்கள் இருக்கும் இடங்கள், கப்பல்கள் செல்லும் இடங்கள் அச்சு பிசகாமல் ஈரானுக்குக் கிடைக்கிறது. (இது இன்றைய தேதி வரை உறுதியான உண்மைச் சம்பவமாகும்). வான் தாக்குதல்கள் மூலம் மட்டும் ஈரானின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அமெரிக்கா கண்டிப்பாகத் தரைப்படை வீரர்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
ஆனால் 78% அமெரிக்கர்கள் இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிரானவர்கள். இந்தப் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போனால், இஸ்ரேல் தங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தால் முழு உலகையும் அழிக்கும் "Samson Option" ஐ (தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டால் முழு உலகிற்கும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தி முழு உலகையும் அழிக்கும் கோட்பாடு).
அத்துடன் தங்களின் சொந்த மக்களைக் கொல்லும் "Hannibal Directive" ஐப் பயன்படுத்தும் ஆபத்தும் இப்போது உருவாகியுள்ளது. இறுதியாகச் சொன்னால், இது அமெரிக்காவிற்கு ஈராக்கை அல்லது லிபியாவை ஆக்கிரமித்தது போன்ற எளிதான காரியமல்ல.
21 ஆம் நூற்றாண்டின் சமச்சீரற்ற யுத்தத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை. இந்த யுத்தம் முடிவடையும் போது, டாலரின் ஆதிக்கம் சிதைந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்து, உலகம் 'Multipolar world' (அதிகார மையங்கள் பலவற்றைக் கொண்ட உலகம்) என்று மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
நன்றி: சரவணன் கோமதி நடராசா.

