🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விரைவில் ஆரம்பம்... வடக்கிலிருந்து வீசும் வசந்தகாற்று!

ஆசிரியர் அறிமுகம்...

இக்கட்டுரையின் ஆசிரியர் திரு. அன்பரசு துரைசாமி,அவர்கள் 11.05.1989 அன்று ஈரோடு மாவட்டம் , பெருந்துறை வட்டம். நிச்சாம்பாளையம் அருகேயுள்ள மயிலங்கிணத்துப்பாளையம் கிராமத்தில் திரு. தி.துரைசாமி - திருமதி.அஞ்சலா தேவி தம்பதியினருக்கு மூத்தமகனாகப்பிறந்தார். இவருக்கு திரு.இரகுபதி என்ற தம்பி உள்ளார்.கட்டுரையாளருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் கிராமத்தில் பெரிய தலைமுறையில் 4-ஆம் தலைமுறை வாரிசு இவராவர்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு MBA பட்டம் பெற்றவர், தென்னிந்திய பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களில் விளம்பர அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்தார். தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, பல்வேறுபட்ட மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து வைத்துள்ளார். அந்தந்த பகுதி வட்டார மொழிகளிலே தன் நண்பர்களுடன் பேசக்கூடியவர்.

தனது தந்தையுடன் சேர்ந்து 8 வயது முதலே வியாபார உக்திகளையும், நடைமுறை வாழ்வியல் முறைகளையும் கற்றவர். அதனடிப்படையில் தன் 26 வயதிலேயே பெருந்துறை மற்றும் திருப்பூர் பகுதிகளில் விளம்பர நிறுவனம் தொடங்கி நல்ல நிலையில் நடத்தி வருகிறார்.

தனது சிறிய வயதில் இருந்தே செல்வ செழிப்பில் வளர்ந்தவர், வறுமை எப்படி என்றே தெரியாதவர், இவரின் 15 வயதில் தன் தந்தை தொழிலில் ஏற்பட்ட எதிர்பார்க்காத நஷ்டம் இவரின் வாழ்வை புரட்டி போட்டது. இவர் தந்தை மொத்த கொள்முதலில் பருத்தி மற்றும் நிலக்கடலை வியாபாரம் செய்தார்..இவர்கள் நிலக்கடலை பருப்பை கோவில்பட்டி மற்றும் கழுகு மலைக்கு கடலை மிட்டாய் தயாரிப்புக்கு அனுப்புவது வழக்கம், மொத்தம் 17 பேர் கொண்ட குழுவில் நம் நாயக்கர் இனத்தை சார்ந்த ஒரே வியாபாரி இவரின் தந்தை மட்டுமே.

இவரின் தந்தையுடன் இருந்த மிகப்பெரிய கோடீஸ்வர மனிதர்கள் கூட மிகப்பெரிய நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் இவர் தந்தை இன்று இந்த மண்ணில் வாழ இவரே காரணம் என்கிறார் இவரின் தந்தை.

அதுவரை படிப்பில் சுமாராக படித்து வந்த அன்பரசு, தந்தையாரின் தோல்வி கொடுத்த படிப்பினையில் இளங்கலை வணிகவியல் பட்டப் படிப்பில், கல்லூரியில் முதல் இடம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன்மூலம் 17 நேர்முக தேர்வில் பங்குபெற்று 11 இல் வெற்றி பெற்றவர்,  தன் 20 -ஆவது வயதில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே MBA பட்டம் பெற்றார்.

தன் கடின உழைப்பால் 35 வயதில் கிடைக்கவேண்டிய பெரும் பொறுப்பை 23 வயதிலேயே பெற்றார். அந்த நிறுவனத்தில் வழங்கும் சிறந்த பணியாளர் விருது சில முறை இவர் கரங்களையும் அலங்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறடி உயரம், இனிமையான பேச்சு, தொழிலில் கொஞ்சம் கடுமையானவர், நண்பர்களுக்கு பிடித்தவர், மற்றவர்களிடம் மரியாதையுடன் நடப்பவர்.புதுமையான விசயங்கள் தேடுவதிலும், பழையான நல்ல பண்பாடுகள் அழியாமல் காக்க வேண்டும் என நினைப்பவர்.சலிக்காமல் பயணம் செய்யக் கூடியவர்.

பொது நலனில் அக்கறை கொண்டவர். கிராமப்புற வளர்ச்சியில் தன்னார்வ அமைப்புகளோடு பணியாற்றி வருபவர்.விளம்பரம்,மீடியா துறையில் இருப்பதால் நடனம், கவிதை, காமெடி, நிகழ்ச்சி தொகுப்பாளர், பேச்சாளர், என பல்வேறு பணிகளை செய்யக் கூடியவர்.

பணமதிப்பிழப்பு, GST, கோரோனா வைரஸ் பாதிப்பு  போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார ட்ஹேக்கநிலையை கருத்தில்கொண்டு தொழிலில் மட்டுமே அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். தந்தை சந்தித்த தோல்வியை தான் சந்த்தித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாகவும், முன்னெச்சரிக்கையுடனும் உள்ளார்.

இருந்தாலும்  40 வயதுக்கு மேல் அதிகமான அரசியல் மற்றும் சமூக பணிகளில் ஈடுபாடுவேண்டும் என்ற இலக்கினை லட்சியமாகக்கொண்டுள்ளார்.

குடும்ப பாரம்பரியத்தையும், செல்வாக்கையும்  மீட்டெடுப்பதில் அதிக ஆர்வமாக உள்ளார். இவரின் குடும்பத்தினர் சிறந்த ஜோதிடர்களாகவும், கல்வியாளர்களாகவும், நாட்டு வைத்தியம், பொது நலன் சார்ந்து இயங்கக்கூடியவர்களாகவும் பல்வேறு தலங்களில் தங்களை இணைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved