தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-4

DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-4

Radheyan 27 Apr 2021 | 04:20 PM
பகிர்:

ஒரு உறையில்  இரண்டு கத்தி இருக்க முடியாது.

நீதிமன்றங்கள் நீதிவழங்க தவறிவிட்டது சட்டமன்றம் சட்டமியற்றினால் சரியாகத்தான் இருக்கும் என்ற குருட்டுத்தனமான வறட்டு கோட்பாட்டால் சட்டம் 8/2021-க்கு தடைவிதிக்கவில்லை. ஆனால் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு 1990-லும், 2006-லும் உடனடியாக தடைவிதித்த நீதிமன்றம், இப்போது மறுப்பது இந்நாட்டில் இரட்டை நீதி என்பதை நிரூபித்துள்ளது.

கீழ்கண்ட எந்த சட்ட கூறுகளையும் பார்க்க தவறிவிட்டது.

2018ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 102க்கு பிறகு சரத்து 342 A- ன்படி ஜனாதிபதி ஆளுனரை ஆலோசித்துவிட்டு ஒரு மாநிலத்தில் யார் யார் எந்த எந்த பிற்பட்ட பிரிவில் வருவார்கள் என்று அறிவிப்பார் என்று சட்டமாக்கப்பட்டுள்ளது.

எனவே ஆளுநர் 26.2.2021 அன்று சட்ட எண் 8/2021க்கு ஒப்புதல் அளித்தது அதிகாரமற்ற செயல். மேலும் இதேபோன்ற மராத்தியர் இடஒதுக்கீடு சட்டம் 2018 - யை உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண் 3123/2020 -ல் 09.09.2020 அன்று மஹாராஸ்ட்ரா சட்டமன்றத்திற்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்றும் இந்த பிரச்சனையை அரசியல் அமைப்பு சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் அதுவரை அச்சட்டத்தை செயல் படுத்த தடைவிதித்துள்ளது. (குறிப்பு: தமிழக அரசு இதை அறியாமல் செய்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம் ஏனென்றால் உச்ச நீதிமன்றத்தில் 2012 - முதல் நிலுவையில் உள்ள தமிழக இடஒதுக்கீட்டு வழக்கில் சிலர் தமிழக வழக்கையும் மேற்படி மஹாராஸ்ரா வழக்கோடு சேர்க்க வேண்டும் என்று 2020 12 - ம் மாதத்திலேயே வழக்கு தொடுத்து அது நிலுவையில் இருக்கும் போதுதான், நீதிமன்றங்களையும் மக்களையும் தூசியாக மதித்துத்தான் உலக ஜனநாயக வரலாற்றில் எங்குமில்லாத அளவில் மின்னல் வேகத்தில் (சிலநிமிடங்களில்) எல்லா சட்ட மரபுகளையும் படுகொலைசெய்துவிட்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது).

பதிவு தொடரும்.

தொட்டியநாயக்கர் உள்ளிட்டசீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமுதாய அமைப்புகள்.

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Thottianaicker Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண