🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-8

கடலில் மூழ்கிப் போன லேமோரியா கண்டத்தில் மனிதர்கள் வாழும் போது இருந்தே மூலிகை மருத்துவம் அதன் பயன்பாடும் இருந்துள்ளது...

இது பல்வேறு இன குழுவின் கைகளிலிருந்து தொடர்ந்து உருமாறி,   இன்று சில இன மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது...

ஒருவருக்கு அரளி விதையை அரைத்து கொடுத்தால் சில மணித்துளிகளில் ஒருவரின் உயிரை பறிக்கும் வீரியம் இருக்கும் போது, அதே வேகத்தில் நம்முடைய நோய்களை குணமாக்கும் தன்மையும் இயற்கை மூலிகை செடிகளில் உண்டு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ஆகும்...

ஒருவரின் ஆயுள் முடியும் முன்னர் அவர் மரணம் அடைவதில்லை என்பது பல யுகங்களில் வாழ்ந்த நம்  முன்னோர்கள் காலம் தொட்டு நம்பப்படுகிறது.. இதில் உண்மையும் உள்ளது என்பதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது...

ஆனால் கலியுகம் அப்படி அல்ல,  போர்க்களத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பாதி வயதில் மரணம் அடையும் வரலாறும் உள்ளது, அதற்கு காரணம் கலியுகம் இப்படி தான் இருக்கும்  என்று காலம் காலமாக நாம் சொல்கிறோம்.

(அறத்தின் படி ஒரு செயல் நடைபெறவில்லை எனில் கலி முத்தி விட்டது என்று பேச்சு வழக்கில் நாம் சொல்கிறோம்) 

இதே போல சோழர் காலத்தில் குறை மாத பெண்ணரசி உயிர் பிரியும் முன்னர் (மன்னரின் மனைவி) அவள் வயிற்றில் உள்ள குறை மாத குழந்தையை அறுத்து எடுத்து, ஆட்டின் வயிற்றில் வைத்து தைத்து 2 மாதம் வளர விட்டு , முழு குழந்தையாக பெற்றடுத்த சாகச மருத்துவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர்.

மேலும் பெண்ணின் கருவில் இருக்கும்  குழந்தையின் அமைப்பை , அப்படியே தத்ரூபமாக,  கற்சிற்பமாக செதுக்கி உள்ளனர், அந்த சிற்பத்தை இன்று  நம்மில் பலர் கண்டு வியக்கிறோம்..

ராமாயணத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி சென்றதும் மருத்துவம் செய்வதற்கே என்பது வரலாறு மூலம் நாம் அறிந்ததே...

இதனை முழுவதுமாக உணர்ந்து தான் நாயக்க மன்னர்கள் எதிரிகளை விட நம்முடைய  காயம் பட்ட படை வீரர்களை அதிக  எண்ணிக்கையில் காத்துக்கொள்ள முடிந்தது...

மேலும் நாயக்கர் ஆட்சியில் ஓலை சுவடிகளை எழுதும் போது மருத்துவ குறிப்புகள் இருக்குமே தவிர... 

அதை மூலிகைகலிருந்து மருந்தாக மாற்றும் செய்முறை விளக்கமோ, பயன்படுத்தும் முறையோ பெரும்பாலான சுவடிகளில் இருக்காது, இதை ராஜ தத்திரமாகவும் வைத்திருந்தனர்.

மேலும் கணவனை இழந்த விதவை பெண் மருத்துவம் செய்தால் அது பலிக்கும் என்றும் எளிதில் குணமாகும் என்று காலம் காலமாக செவி வழி செய்தியாக நம்பப்படுகிறது, இதை நம்முடைய தற்போதைய மருத்துவத்தில் நானே கண்டுள்ளேன், மருந்தும் செய்யும் நபர்கள் பெரும்பாலும் 60 வயதை கடக்கமாட்டார்கள் என்றும் பாதி வயதிலேயே மரணிக்கும் சாபம் உள்ளது என்பது செவி வழி செய்தி...

மேலும் முஸ்லீம் நாடான  இந்தோனேசியா  தீவில் பாலி என்ற தீவு பகுதியில் இந்துக்கள் உள்ளனர், இவர்களும் நாயக்கர் இன மக்களின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும்,  இவர்களிடம் ஓலை சுவடிகள் உள்ளது என்ற செய்தி தற்போது உண்மையாகி உள்ளது..

இவர்களும் நாயக்கர் மக்களை போல ஸ்ரீ தேவி, பூ தேவி அம்மனை  ஆண்டுக்கொரு முறை வழிபட்டு வருகின்றனர்.

இது போல பல நாடுகளில் நம் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலை சுவடிகள் இருக்கலாம், அதில் உள்ள குறிப்புகள் கொண்டு தற்போது வரை அவர்கள் மருத்துவமும் செய்யலாம், நமக்கு தான் நாம் யார் என்கிற உண்மையே தெரியாமல் வாழ்கிறோம்...

மேலும் மருந்து கொடுக்கும் போது 3 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை (ஒரு மண்டலம் வரை) மருந்து கொடுப்பார்கள், பத்தியம் மற்றும் விரதமும் இருக்க வேண்டி வரும்..இந்த 3 மற்றும் 48 என்கிற எண்களின் கூட்டுத் தொகை 4+8=12, 1+2=3 என்கிற குரு பகவானுக்குரிய (3) என்ற எண்ணிலே முடியும். இதற்கு காரணம் குரு பார்வை கோடி புண்ணியம் மட்டுமல்ல,  எதிர்காலங்களை கணித்து சொல்பவரும் குருவே என்பதால் தான்..

அதிக மழை, வெப்பம், நோய், சூரிய, சந்திர கிரகணம், வானவியல் மாற்றங்கள், புயல், நமக்கு சாதகமான காலங்கள் என்ற அனைத்தும் அறிந்தவர்கள் குரு பகவான் என்பார்கள்..

நூறு  வீரர்கள் போரில் இறந்தால், ஒரு சிறந்த குரு இருப்பின் புதிதாக நூறு பேரை உருவாக்க முடியும், ஆனால் நூறு நபர்கள் இணைந்து ஒரு குருவை உருவாக்க முடியாது, குரு என்பது வரம், மருத்துவம் என்பது கலைகளில் ஒன்று, நூறு மருத்துவர் இருந்தாலும் சில நபர்கள் மட்டுமே கைராசி டாக்டர் என்று சொல்ல காரணமும் குரு ஸ்தானம் இல்லாத மருத்துவர் கண் இருந்தும் குருடன் என்கிறது நாயக்கர் கால மருத்துவ முறைகள்..

 இது போல குளிர் பிரதேச  உணவுகளை நாம் உண்ணக்கூடாது, அவர்களின் குளிர் காலத்தில் பயன்படுத்தும் ஆடைகளையும் நாம் பயன்படுத்தும்  முறையும் தவறு, ஆனால் இன்று நாகரிகம் என்ற பெயரில் இது போன்ற தவறுகள் தற்போது நாம் தொடர்ந்து செய்கிறோம்..

அந்தந்த கால நிலைக்கு ஏற்ப மூலிகை செடிகளின் தன்மையும் வீரியமும் சற்று மாறும்..அதை நாம் மருந்தாக உண்ணும் போது அதன் வீரிய தன்மையும் கொஞ்சம் மாறும்..

குளிர் காலம், இலையுதிர் காலம் என்று பருவ நிலை மாறும் போது மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளின் தன்மையும் மாறும் என்பதே மூலிகை மருத்துவம் செய்வதின் அடிப்படை மந்திரம், இது தெரியாதவனுக்கு மருத்துவ அறம் என்றால் என்னவேற்று தெரியாது, பணம் என்ற வெறி பிடித்த மிருகம் என்று பொருள் கொள்ளலாம்..

இன்று நாயக்கர் இன மக்கள் அந்தந்த இடத்திற்கு ஏற்ப மாறி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது, இதற்கு காரணம் போர் காலங்கள் மற்றும் கால நிலை பருவ நிலைக்கு ஏற்ப தங்கள் நாட்டை காக்க, தொடர்ந்து மாற்றம் கண்டு வந்த இனம் என்பதாலேயே இது போன்ற மனநிலை மற்ற சமுதாய மக்களிடம் ஏற்பட காரணமாக அமைந்து விட்டது...

அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான், அதன் ஆயுளை கருத்தில் கொண்டே அளிக்கப்பட்ட சிறந்த மருந்தாகும் இதுவும் பழங்கால மருத்துவ முறைகளுக்கு சான்றாகும்...

கலியுகத்தில் மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் ஆகும்.. இது தற்போது 60 ஆண்டுகள் என்று நாம் சொல்ல காரணம் மனிதனே தவிர, கடவுளோ, முன்னோர்களோ அல்ல...

ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved