🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரவில் கொடி மரம்! விடிந்ததும் மறைந்தது! - கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், வெங்கக்கல்பட்டியில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் வணங்கும் பொம்மதேவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் கொடிக்கம்பம் நடமுயன்றதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் ஊர்பொதுமக்கள்  சார்பில் கடந்த ஆக'16, திங்கள்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முடிவில் காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கம்பளத்தார் மீது பொய்வழக்கு போடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவ்விடத்தில் தமிழ்புலிகள் கட்சி கொடிக்கம்பம் இரவோடு இரவாக நடப்பட்டது. காலையில் தங்கள் கோவில் இடத்தில் கொடிக்கம்பமிருப்பதை கண்டு திடுக்கிட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved