🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிற்படுத்தப்பட்டோர் ஆணையமா? வன்னியர் நல ஆணையமா? கொதிக்கும் தலைவர்!

தமிழகத்தில் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடைத் தொடந்து நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆணையத்தின் தலைவர்களாக தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருப்பதும், அவர்கள் சுயசாதிப்பற்றோடு தங்கள் சாதிக்கு மட்டுமே உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்வதுமே அடிபடைக்காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார் தடயவியல் முன்னாள் இயக்குனரும், சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திரு.செ.விஜயகுமார் அவர்கள்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் 1969-இல் முதன்முதலாக அமைக்கப்பட்டதில் தொடங்கி இன்றுவரை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒரு சாதியின் பிடியில் சிக்கிக்கொண்டு இருப்பதாகவும், ஆணையத்தின் தலைவர்களாக இருக்கும் அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் ஆணையத்தின் பிற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி தங்கள் சாதிகுறித்த தவறான புள்ளி விபரங்களை அளிப்பதோடு, உள் ஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரை செய்ததே இன்றைய இக்கட்டான சூழலுக்கு அரசைத் தள்ளியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் பேட்டியின் முழு விபரம் வீடியோவில்...



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved