🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரன் பிறந்தநாளில் கம்பிளிப் போர்ப்படைகளின் அணிவகுப்பு! - கண்கொள்ளாக்காட்சிகள்!

பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் நேற்று (03.01.21) தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீண்ட நாட்களுக்குப்பிறகு கம்பளத்து இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 650 ஆண்டுகளுக்கு முன் கம்பிளிதேசத்திலிருந்து புறப்பட்ட கம்பளத்தார்களின் வாழ்வு தமிழக மண்ணோடு இரண்டரக்கலந்தது. 500 ஆண்டுகள் தொடர் போர்மரபில் வந்த கம்பளத்தார் இனம், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கடைசி பாளையம் வீழும்வரை வாள்வீசிய பெருமைக்குறியவர்கள். 

பாளையங்கள் வீழ்ந்து ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரை ஆதிக்கம் செலுத்திய கம்பளத்தார், சுதந்திரத்திற்குப்பின்பான மாற்றங்களில் சுதாரித்துக்கொள்ள 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளில் தன்னெழுச்சியாக தமிழகமெங்கும்  லட்சக்கணக்கான மக்கள் கொரில்லா படை வீரர்கள் போல் திடீரென திரண்டு வந்தது, போர்க்குடிகளின் மரபணுவின் எச்சங்களும், மிச்சங்களும் இன்றைய கம்பளத்து இளைஞர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved