🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மருத்துவ தரவரிசைப்பட்டியலில் 4-ஆம் இடம்பிடித்தார் இ.மெய்யரசி!

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஜூலை 25) வெளியிட்டார். இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த செல்வி இ.மெய்யரசி மருத்துவ தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடம்பிடித்துள்ளார். இதன் விவரம் வருமாறு,

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள பிள்ளப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரு.இருதயகாந்தன் - திருமதி.புவனேஷ்வரி தம்பதியினர். மெக்கானிக் தொழில் நடத்திவரும் இருதயகாந்தன் மகளான செல்வி.மெய்யரசி சி.எஸ்.புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படித்தார். பின்னர் பாய்ச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை படித்தார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 576 மதிப்பெண்பெற்று வெற்றிபெற்றார்.

மாநிலப்பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளியில் பயின்றுவந்த மெய்யரசிக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து தயாரிக்கப்படும் நீட் வினாத்தாள் ஒரு சவாலாக இருந்தது. இச்சவாலை தீரத்துடன் எதிர்கொண்ட மெய்யரசி கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 547 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.


இந்நிலையில் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நீட் தேர்வில் 720-க்கு 547 மதிப்பெண் பெற்ற இராசிபுரத்தைச் சேர்ந்த இ.மெய்யரசி நான்காவது இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றிபெற்ற மெய்யரசிக்கு தான் விரும்பிய கல்லூரியில் இடம்கிடைக்காததால் இந்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்தார். இதில் நான்காவது இடம் பெற்றுள்ளதின் மூலம் தமிழகத்தில் முதன்மையான மருத்துவக்கல்லூரியான மெட் ராஸ் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனினும் ஜூலை 30-ஆம் தேதி தொடங்கவுள்ள மருத்துவக் கலந்தாய்வில் மெய்யரசி தான் விரும்பும் கல்லூரியைத் தேர்யவுள்ளார்.

இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று தரவரிசைப்பட்டியலில் நான்காம் இடம்பிடித்த இ.மெய்யரசி-க்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆர்.பி.பூபதி மற்றும் பிள்ளப்பநாயக்கனூர் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







































































































































தகுதிப்பட்டியலில் நான்காம் இடம் பிடித்து மருத்துவக்கல்லூரியில்  மெய்யரசிக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வீ,க,பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆர்.பி.பூபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved