தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர் - கடலாடி - திருமதி.வாசுகி சின்னமணி

ஒன்றியக்குழு உறுப்பினர் - கடலாடி - திருமதி.வாசுகி சின்னமணி

Senthilkumar 10 Jul 2020 | 04:02 PM
பகிர்:

திருமதி.C. வாசுகி  அவர்கள் 1985- இல் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே T.பிச்சையாபுரம் கிராமத்தில் திரு.செல்லத்துரை நாயக்கர் – திருமதி.பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளிவரை பயின்றுள்ளவர் திரு.சின்னமணி என்பவரை மணந்துள்ளார். 

postgallery(150)

திரு.சின்னமணி அவர்கள் 1979-இல் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள T. கரிசல்குளம் கிராமத்தில் திரு.அக்னி நாயக்கர் – திருமதி.பொட்டையம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ள திரு.சின்னமணி- திருமதி.வாசுகி தம்பதியினருக்கு மணமுடித்துள்ள இவருக்கு C.சுந்தர்ராஜன், C.மகேஷ்வரன் என்ற இரு மகன்களும், C.சுந்தரவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

தனது இளைமைக்காலம் முதற்கொண்டு தி.மு.கழகத்தின் ஆதரவாளராக வளர்ந்த திரு.சின்னமணி அவர்கள் பதினெட்டாவது வயதில் தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வருகிறார். அதன்பின் தி.மு.கழகத்தில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு இருபதாண்டுகளாக பணியாற்றி வருகிறார். அரசின் மக்கள் நலத்திட்டங்கள், இலவச உதவிகள், போன்றவற்றை அடித்தட்டு மக்களுக்குப் பெற்றுத்தந்திருக்கிறார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.சின்னமணிஅவர்கள்.

postgallery(150)

கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடலாடி ஒன்றியம் 18-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.கழக வேட்பாளராகக் களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.சின்னமணி – திருமதி. வாசுகி தம்பதியினர் சாதி,மத,இன, மொழி  பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Kadalladi - Mrs.Vasuki Chinnamani
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண