🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி திருமதி.குருவம்மாள் கந்தசாமி!

திருமதி.குருவம்மாள் கந்தசாமி அவர்கள் 11.06.1975-இல் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகேயுள்ள கரிசல்குளம் கிராமத்தில் விவசாயத் தம்பதிகளான இராமையா-முத்தம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி வரை பயின்றுள்ள குருவம்மாள், விருதுநகர் கோட்டைபட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை மணமுடித்துள்ளார். இத்தம்பதிகளுக்கு சதீஷ், கார்த்திக் என்ற இருமகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

பாரம்பரிய திமுகழக குடும்பத்தைச் சேர்ந்தவரான கந்தசாமி அவர்களின் தந்தையார் A.C.M.ஞானவேல் அவர்கள் கிளைக்கழக செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியதோடு, அவைத்தலைவர் பதவியிலும், 1996-2001 வரை நகரமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கட்சி அரசியலில் தீவிரமாக இருந்த அதேவேளையில், சமுதாய அமைப்பிலும் தீவிரமாக பணியாற்றியவர் ஞானவேல் அவர்கள். த.வீ.பண்பாட்டுக்கழகத்தின் மாவட்டத் தலைவர் பொறுப்பு வகித்தவர். இந்த பின்புலத்திலிருந்து வந்தவரான கந்தசாமி அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே திமுக-வில் ஈடுபாடோடு இருந்து வருவபர். 


கட்சியின் தீவிர உறுப்பினரான கந்தசாமி அவர்கள், எதிர்கட்சியாக திமுக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற பல போராட்டங்களில் பங்கேற்று கைதாகியுள்ளார். முழுநேர விவசாயியாக உள்ள கந்தசாமி அவர்கள் கூடுதலாக பால்பண்ணையும் நடத்தி வருகிறார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சிக்காக தீவிரமாக களப்பணியாற்றியுள்ள கந்தசாமி அவர்கள், 2001,2006 ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் விருதுநகர் நகராட்சி 11-வது வார்டில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார். பதினைந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது துணைவியார் திருமதி.குருவம்மாள் அவர்களை மறுசீரமைக்கப்பட்ட விருதுநகர் நகராட்சியின் 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களமிறக்கி மகத்தான வெற்றிவாகை சூடியுள்ளார். அரசியலிலும், சமுதாயத்திலும் நீண்ட அனுபவமுள்ள கந்தசாமி தம்பதியினர், நகரமன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றி மக்களின் மனங்களை வென்று தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்திட வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved