நகராட்சியில் வெற்றிகண்ட நாயகர்கள்!
திரு.R.S.சரவணன் அவர்கள் 15.02.1978-இல் விருதுநகர் மாவட்டம், முத்துராமன்பட்டியில் திரு.சுந்தரராஜ் - திருமதி. வேலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி S.மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
தந்தையார் சுந்தரராஜ் அவர்கள் விவசாயப்பணியோடு, நகராட்சி ஒப்பந்ததாரராகவும் இருந்தவர். அதனடிப்படையில் நேரடி அரசியலில் பங்கேற்காவிட்டாலும், அரசியல் சார்புநிலையோடு இருந்தவர். தந்தையாரின் அரசியல் பின்புலத்தோடு சிறுவயது முதலே அதிமுக அபிமானியாக இருந்த சரவணன், பின்னாளில் கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த பத்தாண்டுகளாக அப்பதவியில் இருந்துவரும் சரவணன், நகர மீனவர் அணிச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி தலைமையின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள சரவணன் விருதுநகர் நகர கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்காக தீவிர களப்பாணியாற்றிய அனுபவமுள்ள சரவணன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஆளும் அதிமுக வேட்பாளராக இரட்டைய்லை சின்னத்தில் போட்டியிட்ட சரவணன், சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெறும் வகையில் செயல்பட்டு, 2022'பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மறுசீரமைக்கப்பட்ட விருதுநகர் நகராட்சியின் 31-வது வார்டில், எதிர்க்கட்சியாகவுள்ள அதிமுக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார். முதல்முறையாக நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரவணன், சிறப்பாக மக்கள் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.