🔴 LIVE | முப்பெரும் விழா 2023


31/2 வயதில் D.J.வியான் சாதனை! - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம்பெற்றார்!

நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது இளந்தளிர் D. J.வியான் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளார். இதன் விவரம் வருமாறு,

நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கட்டப்பட்ட கட்டபொம்மன் அகாடமி-க்காக தலா ரூ.200000/- (இரண்டு லட்சம்) என ரூ.400000/- வழங்கியவர்கள் திருச்செங்கோட்டைச் சேர்ந்த திரு.சரவணன் – திருமதி.வசந்தா மற்றும் திருப்பூர் ஸ்ரீ வேலவன் கோன்ஸ் உரிமையாளரான திரு. வேலுச்சாமி – திருமதி. மகேஸ்வரி குடும்பத்தினர். இவர்களின் பெயரனும் திரு.தினேஷ் – திருமதி. ஜீவிதா தம்பதியினரின் மூன்றரை வயது மகனுமான D. J. வியான் திருப்பூரிலுள்ள காட்டன் வேலி பள்ளியில் Pre KG படித்து வருகிறார். சைக்கிள் ஓட்டிவதில் மிகவும் விருப்பமுடைய வியன் தூங்கும் நேரம் தவிர எப்பொழுதும் சைக்கிள் தான். 

வியானின் ஆர்வத்தை உணர்ந்த குடும்ப நண்பர்கள் அவரின் முயற்சியை சாதனைப்பட்டியலில் சேர்க்க விரும்பினர். இதனையடுத்து “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” சில் இடம்பெறச்செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் திருசெங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் முன்னிலையில் வியான் சைக்கிள் ஓட்டினார். இவர் 26 நிமிடம் 7 வினாடி நேரம் தொடர்ச்சியாக ஓட்டி தனது சாதனையை “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ஸ்” சில் பதிவு செய்தார். இதற்குமுன் 31/2 வயதில் யாரும் இந்தச் சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கிள் ஓட்டுவதில் மூன்றரை வயதில் சாதனைபடைத்த D.J.வியான் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved