🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குழந்தைகளின் உயிர் குடிக்கும் சளி, இருமல் மாத்திரை!

Coldrif எனும் ப்ராண்ட்   இருமல் மருந்தைப் பருகிய மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சார்ந்த பன்னிரெண்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், உடனடியாக தற்போது சந்தையில் புலக்கத்தில் இருக்கும் COLDRIF சிரப்களின் விற்பனை முடக்கம் செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய மருந்துகள் கட்டுபாட்டுக்கழகம் நடத்திய ஆய்வில் COLDRIF எனும் ப்ராண்ட் பெயர் உடைய  குழந்தைகளின் இருமல் சளிக்கு தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்தில் "டை எத்திலின் க்ளைகால்"  Diethylene glycol அளவில் சற்று அதிகமாக  இருந்து அதனால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது. 

எனவே.. இந்த குறிப்பிட்ட ப்ராண்ட் உடைய மருந்தை தாங்கள் வாங்கியிருந்தால் அதை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். ( COLDRIF SYRUP பேட்ச் எண் SR-13 manufactured date May 2025; Expiry date April 2027) 

மருந்தகங்கள் இந்த ப்ராண்ட் மருந்தை விற்க வேண்டாம் என்று  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தமிழக அரசு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையும்  இந்த ப்ராண்ட் மருந்தை விற்பனை செய்ய உடனடியாக தடைவிதித்துள்ளது. 

பின்குறிப்பு

இந்த பிரச்சனை  COLDRIF எனும் இந்த ப்ராண்ட் மருந்தில் மட்டுமே இருக்கிறது. 

வேறு இருமல் மருந்துகளில் இந்த பிரச்சனை இல்லை  .எனவே தேவையற்ற பிற வதந்திகளை நம்பி மற்ற இருமல் மருந்துகளை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை. 

பின் இணைப்பு

இருமல் மருந்துகளுடன்  பால் கலப்பதால் அது விஷமாக மாறாது. அப்படி பரப்பி விடப்படும் வதந்திகளில் உண்மை இல்லை.

நன்றி: Dr.அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved