🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சியில் பேரூராட்சித் தலைவியான திருமதி. சௌந்தரப்பிரியா!

திருமதி.சௌந்தரப்பிரியா மோகன்ராஜ் அவர்கள் 15.04.1984-இல் கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகேயுள்ள மணல்மேடு கிராமத்தில் திரு.சண்முகம்-திருமதி.விஜயலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தவர். மேல்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளார். திரு.மோகன்ராஜ்-திருமதி.சௌந்தரப்பிரியா தம்பதிகளுக்கு நிதீஷ்குமார் என்ற மகனும், மனிஷா என்ற மகளும் உள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள தொட்டியபட்டியில்  திரு.இராமசாமி - திருமதி.ராமாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான திரு.மோகன்ராஜ், மேல்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளார். பூர்வீக விவசாயியான திரு.மோகன்ராஜ், மாணவப்ருவத்திலிருந்தே அரசியலில் இருந்து வருகிறார்.

1997-இல் திமுக-வில் தொட்டியபட்டி கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பணியாற்றி வந்தார். இதன் தொடர்ச்சியாக இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்படியாக கட்சியில் வளர்ந்து வந்தவர் 2008 முதல் இன்றுவரை (2022) சுமார் பதினான்கு ஆண்டுகளாக பழைய ஜெயங்கொண்டம் நகரச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். 


கழகத்தின் தீவிர தொண்டரான திரு.மோகன்ராஜ், கட்சிக்கு சோதனையான நேரங்களிலும், எதிர்க்கட்சியாக போராடிய நேரங்களில் முழுநேர அரசியல்வாதியாக களம்கண்டு, கழகம் அறிவிக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் முழுமையாக கலந்துகொண்டு கழகத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.

2011-இல் முதல்முறையாக கழகம் எதிர்க்கட்சியாக இருந்து சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற நேரடித்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தனது துணைவியார் திருமதி.சௌந்தரப்பிரியா அவர்களை பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகழக வேட்பாளராக களமிறக்கி வெற்றிபெறச் செய்தார். இதனைத் தொடர்ந்து, கால்நூற்றாண்டுகாலம் கட்சியின் உண்மைத்தொண்டனாகவும், தலைமையின் விசுவாசியுமான திரு.மோகன்ராஜ், கழகத்திற்கு ஆற்றிய சேவைக்காக திருமதி.சௌந்தரப்பிரியா அவர்களுக்கு பேரூராட்சித் தலைவர் பதவி வழங்கி கௌரவித்துள்ளது கழகத்தலைமை. இளம் வயதில் பேரூராட்சித் தலைவர் பதவியை அலங்கரித்துள்ள திருமதி.சௌந்தரப்பிரியா தம்பதியினர் சாதி,மதம், இனம், மொழி பாகுபாடில்லாமல், அனைவருக்குமான தலைவராக பணியாற்றி மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved