நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி நாயகி!
திருமதி.M.ஜெயந்தி (36) கரூர் மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் திரு.சண்முகம்-திருமதி.விஜயலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். அரவக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு.N.மணிகண்டனை மணந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு M.தரணிதரன் என்ற மகனும் M. அபிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
திருமதி.ஜெயந்தி அவர்கள் பிறந்த குடும்பம், புகுந்த குடும்பம் இரண்டுமே அரசியல் பாரம்பரியமும், சமுதாய செல்வாக்கும் கொண்டது. பழுத்த காங்கிரஸ்காரரான இவரின் தாத்தா ராஜூ நாயக்கர் 80 களில் கரூர் மாவட்டம் தந்தோன்றிமலை ஒன்றிய பெருந்தலைவராக இருந்தவர் . அதேபோல் மாமனார் நினைவில் வாழும்.நடராஜ் நாயக்கர் 1972-இல் அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து உறுப்பினராகவும், அரவக்குறிச்சி நகர அதிமுக செயலாளராக நீண்டகாலம் இருந்தவர். கணவர் திரு.மணிகண்டன் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவராக 2011 முதல் 2016 வரை பணியாற்றியுள்ளார்.
அரசியலைப்போலவே சமுதாயத்திலும், சமுதாயப்பணியிலும் செல்வாக்கோடும், அர்ப்பணிப்போடும் பணியாற்றிய பாரம்பரிய பெருமை திருமதி.ஜெயந்தி அவர்களின் குடும்பங்களுக்கு உண்டு. சமுதாய பணியாற்றுபவர்களின் வேடந்தாங்கலாக இவரின் குடும்பம் இருந்துள்ளது.
இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் 40 லட்சம் இராஜகம்பள சமூகத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்திலுள்ள ஓரிரு ஒன்றியச் செயலாளர்களில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.மணிகண்டனும் ஒருவர். மாவட்ட அமைச்சரின் நம்பிக்கைக்குறிய தளபதிகளில் முதன்மையானவர். அரவக்குறிச்சி பேரூராட்சியின் 7-வது வார்டில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமதி.ஜெயந்தி அவர்கள், மகளிருக்கு ஒதுக்கப்பட்ட அரவக்குறிச்சி பேரூராட்சியின் பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இநன்மூலம் நெடிய அரசியல் பின்னனி கொண்ட குடும்பத்திலிருந்து பெருந்தலைவர் பதவியில் தாத்தா, கணவருக்குப் பிறகு மூன்றாமவராக பொறுப்பேற்றிருக்கிறார் திருமதி.ஜெயந்தி மணிகண்டன். குடும்ப பாரம்பரிய பெருமையையும், புகழையும் நிலைநாட்டும் வகையில் செயல்பட்டு, வாய்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறோம்.