தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம்.

ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம்.

Admin 29 Jun 2026 | 01:53 PM
பகிர்:

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் திரு. வைகோ அவர்கள் அளித்ததாக வெளியாகியுள்ள ஒரு பேட்டியில், "இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் நானே உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்கிறேன் என்று விஜய் கூறினார்" எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தக் கருத்து உண்மையானதெனில், சில முக்கியமான அரசியல் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விஜயின் கட்சியுடன் இணைந்ததற்கு இதுவே காரணமா?

ஒரு கட்சியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற மக்களின் பிரதிநிதிகளை, பதவியை ராஜினாமா செய்யச் செய்து மற்றொரு கட்சியில் இணைப்பதற்கு முயற்சிப்பது அரசியல் நாகரிகமா?

இதற்கு "குதிரைப் பேரம்" என்று பெயர் வைக்கக் கூடாதா?

தமிழக மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் என்பது, மற்ற கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சியில் சேர்ப்பதா? அல்லது புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதா?

பதவி, அரசியல் வாய்ப்பு அல்லது பிற வாக்குறுதிகளின் மூலம் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை தன் பக்கம் இழுப்பது எந்த வகையான அரசியல் பண்பாட்டை பிரதிபலிக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஏனெனில், அரசியலில் வெளிப்படைத்தன்மையும், மக்களின் நம்பிக்கையும் எந்தக் கட்சிக்கும் மிகவும் முக்கியமானவை.

அ.காசிராஜன் M.A., 
அஇஅதிமுக, விருதுநகர் (கி) மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர்.

குறிச்சொற்கள்

அரசியல் தமிழ்நாடு TVK Kasirajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண