🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமணவிழா! - தலைவர்கள் வாழ்த்து.

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் இல்லத் திருமணவிழா இன்று (திங்கள்கிழமை) காலை பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ள தங்கசரஸ் திருமண மண்டபத்தில் போரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையிலும், இராமபட்டிணம் ஜமீன்தார் விஷ்ணுகாந்த சக்திவேல் ராஜா அவர்களின் முன்னிலையிலும் சிறப்புடன் நடைபெற்றது. 


முன்னதாக நேற்று மாலை (11.09.2022)  நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், கோவை 97 டிவிசன் செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் மணமக்கள் செ.அன்பரசன் B.E., M.B.A.,- மோ.ஷாலினி B.E., ஆகியோரை வாழ்த்தினர். 



மேலும், இல்லறவாழ்வில் அடியெடுத்து வைக்கும் இணையர்க்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜ் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இத்திருமணவிழாவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி எம்.சிவக்குமார், கோவை தெற்கு மாவட்ட தலைவர் போளியம்பட்டி சேகர்,  தெற்கு மாவட்ட செயலாளர் மண்ணூர் வெங்கடேஷ், தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் மாசநாயக்கன் புதூர் சுரேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் குணசேகரன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மாச்சநாயக்கன்பாளையம் சண்முக குமார், கோவை வடக்கு மாவட்டம் ஈச்சனாரி கிளை செயலாளர் கார்த்திக் மற்றும் சின்னத் தொட்டிபாளையம் ஆறுமுகம், ஈச்சனாரி பிரதீப், ஆகியோரும்


கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பெரிய தொட்டிபாளையம் மனோகரன், தாமரைக் குமரேசன், வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈச்சனாரி காளிமுத்து, ஈச்சனாரி கிளை ஆலோசகர் மண்ணூர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திராபுரம் பழனிசாமி


மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், ஈச்சனாரி கிளை மகளிர் அணி தலைவர் பாக்கியலட்சுமி, மாச்சநாயக்கன்பாளையம் ஊர் நாயக்கர் சார்பாக அவரது மனைவி வசந்தாமணி ஆகியோரும்


வக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, நல்லட்டிபாளையம் ஊராட்சி தலைவர் தாமரை குமரேசன், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் மச்சநாயக்கன்பாளையம் ஆர் கணேசன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ஈச்சனாரி ஆர்.ஏ.கணேசன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, ஊராட்சி செயலாளர் தேவராஜ், தொழிலதிபர் அணு மாரிமுத்து,


ராமபட்டினம் ராஜமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved