தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
மாவட்ட பொருளாளர் இல்ல திருமணவிழா! தலைவர்கள் வாழ்த்துச்செய்தி!

மாவட்ட பொருளாளர் இல்ல திருமணவிழா! தலைவர்கள் வாழ்த்துச்செய்தி!

Radheyan 21 Mar 2023 | 04:33 PM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கப் பொருளாளர் இல்லத் திருமணவிழா நாளை நடைபெறுவதையொட்டி, சிறப்பான முறையில் விழாவினை நடத்திட மாவட்ட நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட இணை ஒருகிணைப்பாளர் சிவக்குமார் கூறியிருப்பதாவது,


கோவை வடக்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளராக இருந்து வருபவர் மாச்சநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கணேசன். கோவை சிப்காட் பகுதியில் சொந்தமாக தொழில்நிறுவனம் நடத்திவரும் திரு.ஆர்.கணேசன்-திருமதி.ஜி.சாந்தி ஆகியோரின் ஒரே மகன் ஜி.சஞ்சீவ். இவர் கோவையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சஞ்சீவ்-க்கும் கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.எம்.கோவிந்தராஜ்-திருமதி.பேபி மகேஸ்வரி தம்பதியினரின் மகள் ஜி.திவ்யப்பிரியா.B.Com (CA)-வுக்கும் வருகின்ற வியாழக்கிழமை (23.03.3023) காலை பொள்ளாச்சி-பாலக்காடு சாலையிலுள்ள Dr.வேலுச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


நாளை (22.03.2023) மாலை 6 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த திருமணவிற்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகளுக்கும், சமுதாய பெரியோர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தலைவர்கள் வருகைதர உள்ளனர்.


கடந்த ஜூலை இறுதியில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடங்கப்பட்டு, சென்ற ஜனவரி 29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழா எழுச்சிக்குப்பின் உள்ளூர் மாவட்ட நிர்வாகியின் இல்லத் திருமண விழா என்பதால், திருமண ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக செய்து வருகிறனர்.  


இந்த திருமண விழாவில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அமைப்புச் செயலாளர் சரவணன், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி மற்றும் மாவட்ட , கிளை நிர்வாகிகள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே மாவட்ட பொருளாளர் இல்ல திருமணவிழாவிற்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜ், துணைத்தலைவர் பெருமாள், மண்டல் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம், சுந்தரராஜன், சுப்பிரமணி உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Ganesan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண