தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
அகாடமி நன்கொடையாளர் திருமணம்! அமைச்சருக்கு நேரில் அழைப்பு!

அகாடமி நன்கொடையாளர் திருமணம்! அமைச்சருக்கு நேரில் அழைப்பு!

Radheyan 03 May 2023 | 11:13 PM
பகிர்:

அகாடமி நன்கொடையாளர் திருமணம்! அமைச்சருக்கு நேரில் அழைப்பு!

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நீராவிகரிசல்குளம் கிராமம் அம்பலம் இராஜ் நாயக்கர் இளைய மகனும், மென்பொருள் பொறியாளருமான ஆர்.வீரசூரையா - விருதுநகர் மாவட்டம் T.வாழவந்தாள்புரம் சொ.சுப்புராம் அவர்களின் மூத்தமகள் எஸ்.சுஜிதா ஆகியோரது திருமணம் இம்மாதம் 24-ஆம் தேதி நீராவிகரிசல்குளத்தில் நடைபெறவுள்ளது. பிரபல தொழிலதிபரும், ஸ்ரீ விநாயகா புளூ மெட்டல்ஸ் உரிமையாளருமான எம்.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இத்திருமணத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் நடத்தி வைக்கவுள்ளார்.


டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் கேட்டு நடைபெற்ற போராட்டங்களிலும், வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான சட்டப்போரட்டம் போன்ற எதிர்கால சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் அக்கறையோடு தங்களை ஈடுபாடுத்திக்கொள்ளும் விரல்விட்டு எண்ணிக்கையுள்ள இளம் தலைமுறை மென்பொருள் பொறியாளர்களில் வீரசூரையா முதன்மையானவர். தவிர, வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியின் நன்கொடையாளராகவும் இருந்து வருபவர். 


இந்நிலையில், அமைச்சரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஒக்கரையா ஆகியோர் மணமகன் வீரசூரையா வுடன் சென்று அமைச்சர் இராஜகண்ணப்பன் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Sooraiah thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண