🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சர் நடத்திவைத்த அம்பலக்காரர் இல்ல திருமணம்!

இராமநாதபுரம் மாவட்டம்,  நீராவி கரிசல்குளம் அம்பலக்காரர் இராஜ் நாயக்கர் மகனும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னையின் நன்கொடையாளருமான செல்வன். ஆர்.வீரசூரையா - செல்வி.எஸ்.சுஜிதா ஆகியோர் திருமணம் நேற்று முன்தினம் (24.05.2023) புதன்கிழமை காலை நீராவிகரிசல்குளத்திலுள்ள முருகன் கோவிலில் நடைபெற்றது. 

இந்த திருமணத்தை நடத்திவைக்க வருகைதருமாறு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அவர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு தொழிலதிபர் மணிவாசகன் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு மாண்புமிகு அமைச்சர் இராஜகண்ணப்பன் அவர்கள் குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் வருகைதந்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். 

மாண்புமிகு அமைச்சரின் வருகையையொட்டி ஒன்றியக்குழு உறுப்பினரும் திமுக பிரமுகருமான (மகாலட்சுமி) ஜெயராஜ்  வழிநெடுக பேனர்கள், கொடி, தோரணங்கள் அமைத்து சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்தார். நீராவி கரிசல்குளம் வருகை தந்த அமைச்சர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக திருமண அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சுழி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, இராமநாதபுரம் மாவட்ட அறங்காவலர்  குழு தலைவர் கார்த்திகைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கம், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  அமைச்சரை வரவேற்றனர். 

மேலும் இத்திருமண நிகழ்வில் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அதன் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், விருதுநகர் மாவட்ட செயலாளர் அருண்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளும்,  தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் மாநில தலைவர் ஆர்.வரதராஜன், கௌரவ தலைவர் நல்லாசிரியர் சங்கரவேலு உள்ளிட்ட நிர்வாகிகளும்,  இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜனசங்கம் சார்பில் தலைவர் மா.மாரையா, பொதுச்செயலாளர் பிச்சைக்கனி உள்ளிட்ட நிர்வாகிகளும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

இதேபோல் தொழிலதிபர் எஸ்.பி.கிருஷ்ணன் மற்றும் வை.பெருமாள் நாயக்கர், வை.மலைராஜன், சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நாமக்கல் அன்னை ஹார்டுவேர் தங்கவேல், மகேந்திரன், யுவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவடங்களில் இருந்து மணமகனின் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

திருமணவிழாவிற்கு வருகை தந்தவர்களை  மணமக்களின் இல்லத்தார் வரவேற்பளித்து, முக்கிய பிரமுகர்களுக்கு அம்பலக்காரர் இராஜ் நாயக்கர் மற்றும் மணமகனின் சகோதர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தகவல் உதவி: எர்ரையா, நீராவிகரிசல்குளம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved