தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
கோவை திருமண வரவேற்பில் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து!

கோவை திருமண வரவேற்பில் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து!

Radheyan 24 Aug 2023 | 04:40 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்கோட்டை மு.ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆர்.நாகராஜன் - திருமதி என்.வனிதா ஆகியோரின் அன்பு மகன் என்.பிரபாகரன் பி.இ,  கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் வக்கம்பாளையம் ஊர்பண்ணாடி திரு.என்.முருகானந்தம் - திருமதி.எம்.ஜோதிலட்சுமி ஆகியோரின் அன்புமகள் எம்.விஷ்ணுபிரியா பி.டெக் ஆகியோரின் திருமண வரவேற்புவிழா நேற்று (23.08.2023) மாலை பொள்ளாச்சியிலுள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.


இந்த திருமண வரவேற்புவிழாவில் கோவை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு) திரு.கிருஷ்ணன், சிறப்புக்காவல்படை துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் , ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.மாசிலாமணி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, செயலாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் சரவணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.சிவக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் திரு.குணசேகரன், மகளிரணி அமைப்பாளர் திருமதி.பாக்கியலட்சுமி, திருமதி. நஞ்சாத்தாள், திமுக பிரமுகர்கள் திரு.தேவராஜ், திரு.தங்கராஜ், தொழிலதிபர் திரு.துரைசாமி, ஈசனத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ராமசாமி, கட்டபொம்மன் பர்பிள் கிளப் உறுப்பினர் திரு.சிவசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி திரு.கலியமூர்த்தி ஐஏஎஸ் சிறப்புரையாற்றினார். திருமணத்திற்கு வருகை தந்தவர்களை மணமக்கள் வீட்டார் வரவேற்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Wedding Reception thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண