🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொருளாளர் இல்லத் திருமணவிழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொருளாளர் இல்ல திருமணவிழா!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்களில் இல்லத்திருமணவிழா நாளை (திங்கள்கிழமை - 10.06.2024) விருதுநகர் மாவட்டம் பலவனத்தத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மணமக்களுக்கு பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம், பாலவனத்தம் முன்னாள் ஆசிரியர் தெய்வத்திரு க.சுந்தரராஜன் - திருமதி சுப்புலட்சுமி ஆகியோரின் பெயரனும், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜு-திருமதி நலசித்ரா ஆகியோரது அன்புமகன் இரா.சுந்தர் B.E.,MBA., தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி தெய்வத்திருவாளர்கள் என்.இராமகிருஷ்ணன் நாயக்கர் - சரஸ்வதி அம்மாள் ஆகியோரது பெயரனும், பந்தல்குடி விஷ்னு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் திரு இரா.சிவக்குமார் - திருமதி. சி.கோமதி ஆகியோரின் அன்புமகள் சி.திவ்யபாரதி M.Com., ஆகியோரது திருமணம் திங்கள்கிழமை (10.06.2024) காலை 6 மணிக்குமேல் 7.25 மணிக்குள் பாலவனத்தம், ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்திலும், மற்ற வைபவங்கள் முத்து மஹாலிலும் நடைபெறவுள்ளது. 


இத்திருமணவிழாவில் பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் இல்லத்திருமணவிழாவையொட்டி அதன் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் வை.மலைராஜன், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved