🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்! - தூத்துக்குடியில் விழித்துக்கொண்ட கம்பளத்தான்!

வன்னியர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 115 சமூகங்களில், பலசமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம், அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்த காரணத்தால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டபொழுது முக்குலத்தோர் சமுதாயம் மட்டும்தான் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக அரசுக்கு எதிராக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டங்கள் தேர்தலோடு முடிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக பிற சமுதாயங்களை இணைக்கும்பணியினை சீர்மரபினர் நலச்சங்கம் ஈடுபட்டது.

சீர்மரபினர் நலச்சங்கத்தின் இம்முயற்சிக்கு பலன்கிடைத்துள்ளது. இதன்விளைவாக மிகவும் பிற்படுத்தோர் பட்டியலிலுள்ள 115 சமுதாயங்கள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும் கூட இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சீர்மரபினர் நலச்சங்கத்தோடு கைகோர்த்துள்ளன. பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து சமூகநீதிக்கூட்டமைப்பை உருவாக்கி கடந்த இருமாதங்களாக கூட்டாக செயல்பட்டு வருகின்றனர்.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள வண்ணார், நாவிதர், ஆண்டிப்பண்டாரம், இசைவேளாளர், மீனவர் உள்ளிட்ட கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் தொட்டிய நாயக்கர் சமூகத்தைவிட பின்தங்கிய நிலையிலுள்ள போதிலும் இடஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்துள்ளவர்களாக ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் போராட்டகளங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்சினையில் நாமக்கல் தவிர்த்த பிற மாவட்டங்களிலுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அக்கறையின்றி இருந்தநிலையில், நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் கலந்துகொண்டிருப்பது சமூகநீதி கூட்டமைப்பில் உள்ள பிற சமுதாயத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தில் த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாவட்ட தலைவர் வலசை கண்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகத்தின் தலைவர் மூலக்கரை.நடராஜன் ஆகியோர் தலைமையில் பத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்ட தொட்டிய நாயக்கர் சமூகத்தினரும் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போராட்டம் குறித்து சமூகநீதி கூட்டமைப்பு அறிக்கையிலிருந்து....

சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு செய்து பிற சாதி சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து இன்று (08.08.2021) காலை 10.30 மணியளவில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் விவிடி சிக்னல் அருகில் வைத்து எம்பிசி மற்றும் டிஎன்டி சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது கண்மூடித் தனமாக, வாக்கு அரசியலுக்காக, வாக்களித்த மக்களை வஞ்சிக்கும், ஏமாற்றும், சித்துவேலைகளை அதிமுக, திமுக, இரட்டை குழந்தை அரசுகள் மாறி மாறி செய்து வருகின்ற சமூக அநீதிகளை நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கும், ரத்தம் கொதிக்கும், எடப்பாடி அரசு கொண்டுவந்த அநீதியான சட்டத்திற்கு எதிரான 115 சமூகங்களின் உரிமைகளை பறிக்கின்ற சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் என்ற சட்டத்தை திமுக அரசு அரசாணை 75/26.7.2021ல் மூலம் செய்து முடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த அநீதியை நிலைக்கச் செய்ய நீதிமன்றங்களிலும் பச்சை பொய்யை திமுக வழக்கறிஞர் 28.07.2021 அன்று உயர்நீதிமன்றத்தில் கூறியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது ஆகும்.பொதுவெளியில் போராடினார்கள் கிடைத்தது என்று போகிற போக்கில் உதட்டளவில் ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டுச் செல்வது தமிழகத்தில் இருக்கின்ற 261 சாதிகளை இழிவு படுத்துவது அனைத்து சமூகங்களும் அரசுகள் செய்யும் இரக்கமற்ற நம் பிள்ளைகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுகின்ற அநீதிகளை தெரிந்துகொண்டு அதை உடனே சரிசெய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசுக்கு எதிராக 261 சமூகங்களின் சார்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.....

1) சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வரும் வரை இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.

2) பழைய இட ஒதுக்கீடு முறையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்கின்றோம்.

3) உடனடியாக புள்ளி விபரச்சட்டப்படி சாதிவாரி சமூக கல்வி நிலைகள் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களை புள்ளிவிபரச் சேகரிப்பு சட்டம் 2008 ன் படி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) துல்லியமான புள்ளி விபர அடிப்படையில் சமூகநீதி அறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து சட்டப்படியான வகுப்புவாரிய இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும்.

5) மருத்துவ சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக கொடுத்த பிறகே AIQ க்கு இடம் ஒதுக்க வேண்டும்.

6) 2007ஆம் ஆண்டு சட்டப்படி நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

என்று ஆர்ப்பாட்டத்தின்போது  சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் பரதர் சமுதாயம் சார்பாக அந்தோணிசாமி, ஜெரால்டு வில்லவராயர், காஸ்ட்ரோ பரதர், சேவியர், விஜயகுமார், பண்ணையார் சமுதாயம் சார்பாக பாலன், சேகர், மயிலேறும் பெருமாள், குன்றுமலையான், வெங்கடசுப்ரமனியன், ராகவன், மறவர் சமுதாயம் சார்பாக கார்த்திக் ராஜா, வன்னியர் சமுதாயம் சார்பாக மாரிச்செல்வம், யோகீஸ்வரர், கண்ணன், கேசவா, தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பாக வலசை கண்ணன், மற்றும் எம்பிசி/டிஎன்டி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பை சார்ந்த அனைத்து சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved