🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புதிய அமர்வு விசாரணை! பிறக்குமா விடியல்?

வன்னியர் உள் ஒதுக்கீடுக்கெதிராக தொடரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நேற்று முன்தினம் 10-ஆம் தேதி தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டதால் எப்படியாவது நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் மனுதாரர்கள் தரப்பில் முனைப்பு காட்டினர். ஆனால் தலைமைநீதிபதி அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி ஆதிகேசவலு இவ்வழக்கு விசாரணையிலிருந்து திடீரென விலகிக்கொள்வதாக அறிவித்ததால் இந்த வழக்கை வேறு அமர்வில் விசாரிக்கப்படும் என்று கூறி தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.

பலலட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட இந்த வழக்கில் ஏதாவது சாதகமான உத்தரவு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த 115 சமுதாய மக்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. 

இதனையடுத்து மாற்றுவழிகளையும், போராட்டங்களையும் எல்லா சமுதாய தலைவர்களையும் அழைத்து விவாதித்துக்கொண்டிருந்தது சமூகநீதி கூட்டமைப்பு.  இதற்கிடையே இதே வழக்கு சம்மந்தமாக மற்றொரு விசாரணை நேற்று காலை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.கே.எம்.விஜயன் வழக்கின் முக்கியத்துவம் கருதி உடனடியாக புதிய அமர்வில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி உடனடியாக இவ்வழக்கு விசாரணைக்கு புதிய அமர்வை அமைக்க உத்தரவிட்டார்.  இதனால் இவ்வழக்கு விசாரணை விரைவில் வரும் என்றும் இதில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சமூகநீதி கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved