🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சரிடம் வலியுறுத்தல்! - செவிசாய்க்குமா அரசு?

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுடன் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் M.பழனிச்சாமி,  விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். 


நேற்று (13.08.2021) இரவு 8.30 மணியளவில் அமைச்சரின் முல்லை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது,  தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அளித்த வாக்குறுதிப்படி  DNT சமுதாய மக்களுக்கு ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூக மக்களுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தினர். மேலும் 115 சமுதாயங்களின் சார்பில் முதல்வரை சந்தித்து தங்கள் குறைகளை விளக்கிட நேரம் பெற்றுத்தர  வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். நாளையே இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்தார். 


இச்சந்திப்பின்பொழுது அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன், பொள்ளாச்சி கனகராஜ், போடிநாயக்கன்பட்டி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved