🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் மாணவர்கள் DNC/DNT-சான்றிதழ் பெறுவதில் சிக்கலா?

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குப்பின் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் MBC-பட்டியலில் 7 விழுக்காடு, 2.5 விழுக்காடு பிரிவில் இடம்பெறும் வகுப்பினர்கள் முறையான சாதி சான்றிதழ் பெறுவது அவசியம் ஆகிறது. அதன் அடிப்படையில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் DNC/DNT என சாதி சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. சாதி சான்றிதழ் தேவைப்படுபவர்கள் அரசு அல்லது தனியார் இ-சேவை மையங்களுக்கு  சென்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அடையாள அட்டையை எடுத்துச்சென்று சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களை தெரிவிக்கும் பொழுது "தொட்டிய நாயக்கர்" வகுப்பைச்சேர்ந்த எனக்கு DNT சான்றிதழ் வேண்டுமென்று கோரவேண்டும்.


உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் நீங்கள் கொடுக்கும் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும். பிறகு உங்கள் விண்ணப்பம்  கிராம அலுவலரிடம் பரிசீலனைக்கு அனுப்பப்படும். கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பதாரரின் தாய்/தந்தை சாதி சான்றிதழை பார்த்தோ அல்லது பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதியைப்பார்த்தோ உறுதி செய்வார். DNT சான்றிதழ் குறித்தான விபரங்கள் அரசு அலுவலர்களுக்கு தெளிவாக தெரியாத காரணத்தால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் போக்கு அதிகமாக நடக்கிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் கீழ்கண்ட அரசு உத்தரவுகளை அவர்களிடம் காட்டி DNT சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தவேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் அதிகாரி நிராகரிக்கும் பட்சத்தில் நீங்கள் சாதி சங்கங்களின் உதவியை நாடலாம். எந்த பிரச்சினையும் இன்றி விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று சான்றிதழைப்பெறலாம். அவ்வாறு சான்றிதழ்பெறும்பொழுது முதலில் DNC சான்றிதழும் அடுத்து DNT சான்றிதழும் பதிவிறக்கம் ஆகும். பெரும்பாலான இ-சேவை மையங்களில் DNC சான்றிதழ் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் DNC சான்றிதழ் பதிவிறக்கமாகும் அதே Folder-இல் DNT சான்றிதழும் பதிவிறக்கமாகும். இ-சேவை மைய அலுவலரிடம் தெளிவாக விளக்கி DNT சான்றிதழையும் சேர்த்தே பெற வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved