🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துரோகமிழைத்தோரை துரத்தியடிப்போம்! - சமூகநீதி கூட்டணி

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர்-6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி திருநெல்வேலி,தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புனு தாக்கல் இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவற்றில் பெரும்பாலான வடமாவட்டங்களில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகமிருப்பதாக  திட்டமிட்டு ஒரு பிம்பம் தமிழக அரசியல் களத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேர்தலில் வெற்றிபெற வன்னியர் சமுதாய மக்களை கவரவேண்டும் என்று திமுக,  அதிமுக ஆகிய கட்சிகள் இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் ஒருசாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

இதை எதிர்த்து 115 சமூகங்கள் கடுமையாக போராடி வந்தாலும் இச்சமுதாய மக்களிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லை என்று நினைத்துக்கொண்டு புறந்தள்ளப்பட்டு வருகிறார்கள். 

கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவரப்பட்டாலும் கூட கடைசிவரை அமைச்சர்கள் இச்சாதி பிரதிநிதிகளை சந்தித்து செய்யுறோம், செய்யுறோம் என்றார்கள்.  ஆனால் சமூகநீதி பேசும் திமுக ஆட்சியில் சட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டதோடு,  நீதிமன்றத்திலும் தவறான புள்ளிவிபரங்களை வழங்கி தடை வழங்குவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக தமிழக முதல்வரை சந்திக்க பலமுறை நேரம்கேட்டும் கூட திரும்பிக்கூட பார்க்கவில்லை. தமிழக முதல்வரின் இந்தச்செயல்பாடு பாதிக்கப்பட்ட சமூகங்களை அவமதிப்பதாக உள்ளது. இதனால் கடுமையாக வேதனையடைந்துள்ள பாதிக்கப்பட்ட சமூகத்தினர் ஒன்றிணைந்து சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். 

இக்கூட்டமைப்பு சார்பில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுவேட்பாளர்களை நிறுத்தி துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved