🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அப்பாடா!....விரிவான விசாரணைக்கு வந்தது வழக்கு!

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு தடை கோரி மனு:

விசாரணையை செப்'20-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு.

மதுரை. செப் 15: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக் கோரி வழக்குகளை விரிவான விசாரணைக்காக செப்'20 ஆம் தேதிக்கு இத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதங்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய தமிழக அரசு சட்டப்பேரவைத் தேர்தலைக்கருத்தில் கொண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னிய சமூகத்தினருக்கு மட்டும் 10.5 உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகங்களைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இதர 40 சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்துச் செய்யவும், அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை இதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி எம்.துரைசாமி அமர்வுக்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இது தொடர்பான அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் எம்.திரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள், உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு முதன் முறையாக தங்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால் வழக்கின் விவரங்களை முழுமையாக படிக்கவேண்டும் என்று கூறி விசாரணையை செப்'20 ஆம தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்கும் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி கொண்டுவந்ததிலிருந்து, அதை எதிர்த்து நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் வரும்பொழுதெல்லாம் பலகாரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடிய சூழல் வரும்பொழுது அமர்வில் இருந்த நீதியரசர்  செந்தில் இராமமூர்த்தி வன்னியராக இருப்பதால் விலகிக்கொண்டார். அதற்கடுத்த நீதியரசர் ஆதிகேசவலு அமர்விற்கு வந்தது, அப்பொழுது விசாரணை தொடங்கும் நேரத்தில் விலகிக்கொண்டார். இதற்கு முன் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதியரசி எஸ்.கண்ணம்மாள் அமர்விற்கு வந்தபொழுது இடைக்கால உத்தரவு வழங்கி வழக்கு விசாரணையை செப்'14-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாய் பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து வழக்கு விசாரணை என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களின் தொடர்முயற்சியின் காரணமாக நீதியரசர் துரைசாமி அமர்வுக்கு நேற்று வந்து, விரிவான விசாரணைக்கு செப்'20-இல் வரவுள்ளது. ஒருவழியாக நமது வழக்கு விசாரணைக்கு இறுதியான அமர்வைப்பிடித்ததே முதல்கட்ட வெற்றி என்ற அளவிற்கு உஸ்.. கொட்ட வைக்கிறது...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved