🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடும் கம்பளத்தார்- வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கிய 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்கள் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  மேலும் இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள், கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை நடத்திவருவதோடு,  தமிழக முதல்வரை சந்தித்து முறையிடவும் நேரம் கேட்டு பலமுறை முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.  ஆனால் அரசு எதற்கும் செவிசாய்க்காத நிலையில்,  BC மற்றும் MBC பட்டியலில் உள்ள வன்னியர் அல்லாத 261 சமூகங்கள் இணைந்து சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.  இந்த அமைப்பின் சார்பில் கடந்த செப்டம்பர்-06 ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிமுக ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்கி வஞ்சித்துவிட்ட நிலையில் திமுக அரசும் இச்சமுதாய மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததோடு, முதல்வரும் இச்சமுதாயமக்கள் மீது பாராமுகமாக உள்ளார். எனவே இடஒதுக்கீடு பாதிப்பை குறித்து சமுதாய மக்களிடையே விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள சமூகநீதி கூட்டமைப்பு முடிவு செய்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் தென்காசி மாவட்டம்,  வாசுதேவநல்லூர் ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வழக்கறிஞர் கி.இராம்குமார், M.A.,B.L.,  (நோட்டரி பப்ளிக், இந்திய அரசு) போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் மூக்குக் கண்ணாடி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. பறிபோயுள்ள இடஒதுக்கீட்டை வென்றெடுக்க சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் கி.இராம்குமார் அவர்களுக்கு மூக்குக்கண்ணாடி சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மக்களையும் வேண்டிக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved