🔴 LIVE | முப்பெரும் விழா 2023


என்ன நாயக்கரே புள்ளைய காலேஜ்ல சேர்க்கப்போறீங்களா? அப்போ இதைப்படிங்க முதல்ல!

என்ன நாயக்கரே, புள்ளைய காலேஜ்ல சேர்க்க போறீங்களாக்கும்?...

ஆமாங்க கவுண்டரே,  நாளைக்குத்தான் ஏதோ கவுன்சிலிங்க்கு வரச்சொல்லியிருக்காங்கன்னு பையன் சொல்றானுங்க...

ஆமா கவுண்டரே... போனவாரம் உங்க புள்ளையை காலேஜ்ல சேத்தப்போனீங்களே என்னாச்சு?

அதை ஏன் கேக்கறீங்க நாயக்கரே...

ஏனுங்க இவ்வளவு சலிப்பா சொல்றீங்க?

ஆமா பின்னே,  புள்ளை எதோ ஈ.சி.ஈ-ன்னு ஒரு படிப்பு இருக்காமா, அதே வேணுமுங்கறா...

ஆனா பாருங்க அந்த சனியன் புடிச்சது லோக்கல்ல இருக்கிற காலேஜ்ல எல்லாம் புல்லாயிருச்சாம். எங்கியோ தூத்துக்குடியில புதுசா அரம்பிச்ச காலேஜ்ல தான் இருக்காம்.  அந்தக்காலேஜ் சரியில்லை போகமாட்டேங்கிற மக வேற.  எனக்கு நம்மவூருலயே மகாலிங்கம் காலேஜ்ல தான் வேணுங்கிறா?

அட கழுதை, இதென்ன நம்ம அப்பனூட்டு காலேஜாக்கும், இங்கயே படிக்கன்னு திட்டிப்புட்டேனுங்க நாயக்கரே...

அவ ஒரே அழுகை,  வாயே மூடமாட்டீங்கிறா?

சரி கழுதை,  டொனேஷன் குடுத்தாவது சேத்திப்போடலாம்னு கேளு புள்ள அவங்ககிட்டன்னு அனுப்புனே...

அப்புறம் என்னாச்சுங்க கவுண்டரே?

அவங்க காலேஜூக்காறங்க டொனேசன் 10 லட்சம் ஆகுங்கறாங்க...

அப்போ பத்து ரூபாக்கு வேட்டு வெச்சுட்டாளா மக..

அதான் ஒரே யோசனையா இருந்திச்சு. பெரியவ வேற டாக்டருக்கு படிக்கறாளே,  அவளுக்கு செலவாகுதேங்கிற கவலை...

ரெண்டேக்கரா காட்ட வெச்சு இதையெல்லாம் ஒப்பேத்த முடியாதேன்னு  விசனமா இருந்துச்சு..

ஆனா சின்னவளை பார்த்தா பாவமா இருக்கு... 

பெரியவளை மட்டும் அவளுக்கு புடிச்சமாதிரி காலேஜ்ல சேர்த்து விட்டுட்டு, எனக்கு மட்டும் யோசனை பண்றீங்கன்னு கேட்கறா பயபுள்ள...

அப்புறம் என்னதான் செஞ்சீங்க கவுண்டரே...

நல்லவேளை,  கவுன்சிலிங் ஆபீசரு ஒருத்தரு ஜாதி சர்டிபிகேட் கொடும்மான்னு வாங்கி பார்த்தாரு....

அவரு உசிலம்பட்டி பக்கம்... கள்ளர் சாதியாம்..

சர்டிபிகேட்ட பார்த்துட்டு, நீங்க என்னய்ய வேட்டுவக்கவுண்டரான்னு கேட்டாரு...

ஆமாய்ன்னே,  உடனே எங்கையே போனப்போட்டாரு....

ரெண்டு மூனு பேரு பைலோட வந்தாங்க...

ஒன்னு கவலைப்படாத பாப்பா...உனக்கு எடங்கெடச்ச மாதிரின்னு சொல்லிகிட்டு பைல புறட்டுனாரு....

எனக்கு ஒன்னும்மே புரியலைங்க நாயக்கரே...

அப்புறம் அவிகளுக்குள்ளையே ஏதோ பேசீட்டாங்க...

எங்க வேட்டுவக்கவுண்டர் சாதி MBC -ல வருது. அதில இருக்கிற எல்லா சாதிகளுக்கும் 20 இடம் இருக்கிறதப் புடுங்கி வன்னியருக்கு சாதிக்கு மட்டும் 10.5 கொடுத்துட்டாங்களாம். இதனால நம்ம பசங்களவிட  கம்மியா மார்க்கு வாங்குன வன்னியர் பையனுக்கு மகாலிங்கம் காலேஜ்ல சீட் கெடச்சிருச்சு...

ஆபீசரு MBC ல வர்ர கள்ளராம். அதுனாலே நெலமையை உடனே புரிஞ்சுட்டாரு...

ஏதோ சாதி சங்கக்காரங்கேல்லாம் சேர்ந்து ஐகோர்ட்ல கேஷ் போட்டு உத்தரவு வாங்கியிருக்காங்கலாம் நம்ம புள்ளைகளுக்கு சொன்னாரு......  MBC ல இருக்கிற வேற சாதிக்காரங்க ஜாஸ்தியா மார்க்கு வாங்கி வன்னியர் குறைச்சு மார்க் வாங்கியிருந்தா இந்த 10.5 இடஒதுக்கீட காட்டி அதிக மார்க் வாங்கின புள்ளைகளுக்கு சீட்டை கொடுக்காம இருக்கக்கூடாதுன்னு கோர்ட்டு சொல்லியிருக்காம்...

அதை அந்த கள்ளர் சாதிக்காரரு மத்த ஆபீசருககிட்ட பேசி மகளுக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்தாரு....

எப்படியோ பத்து லட்சத்தை மிச்சம் புடிச்சுப்போட்டீங்க கவுண்டரே....

அப்புடி இல்லைங்க நாயக்கரே.... இந்த விசயமெல்லாம் நம்ம படிச்ச புள்ளைங்களுக்கே தெரியலை பாருங்க... 

ஆமா உங்க தொட்டிய நாயக்கர் சாதியும்  MBC ல தான வருதுங்க நாயக்கரே?

ஆமாங்க கவுண்டரே,  நல்லவேளை இதைச்சொன்னீங்க, நல்லதாப்போச்சு. பையன் அவனாத்தாகிட்ட ஒருவாரமா மொறஞ்சூட்டிருக்கானுங்க.  நான் பொள்ளாச்சி காலேஜ்லதான் படிப்பேன்னு. 

அவனாத்தாளும் ஒத்த பையன வெச்சுட்டு வெளியூருக்கெல்லாம் வேண்டாம்ங்கங்கிறா...

ஆத்தாளும், மகனும் ஒரு திட்டத்தோடதா இருக்காங்க.நல்ல சேதி சொன்னீங்க கவுண்டரே!

எங்க நாமதான் கைநாட்டுக...படிக்கிற பசங்க தான் இந்த விசியத்தையெல்லாம் சொல்லோனும்.

அவிக எங்கே சொல்றாங்க   பொழுதன்னைக்கும் போனைத்தான் நொண்டீட்டு இருக்கானுக. 

நாம எதாவது பேசுனா ஆத்தாக்காரிக வந்தர்ராளுக. சும்மா பையன பேசறதான் உங்க பொழைப்பேன்னு...

அப்புறம் காலேஜிக்கு வெளியே வந்தா நம்ம கரூர் முருகேஷ் மாப்ளை நோட்டீசை கையில வெச்சுட்டு நிக்கிறாரு. 

என்ன மாப்ளை இவ்வளவு தூரம்ணே? 

அவருதான் இந்த நோட்டீசை கையில கொடுத்து படீங்க மாமான்னு சொன்னாரு. 

கழுத நமக்கெங்க படிக்க தெரியுதுன்னு மககிட்ட கொடுத்து படிச்சு சொல்லுபுள்ளேன்ன...

அவ படிச்சிட்டு அப்புறம் சொல்ற முன்னமே தெரிஞ்சிருந்த சரிங்கிறா...

அப்பத்தான் முருகேஷ் மாப்ள சொன்னாரு, நாங்க டெய்லி ஜூம்ல இதைத்தான் மூனுமாசமா முக்கீட்டிருக்கோம்ன்னு...

சரி எப்படியோ நம்முது நல்லபடியா முடிஞ்சுது.  நீங்க வேய்க்காணமா இருங்க நாயக்கரே!

இந்தம்மா முருகேஷ் மாப்ள குடுத்த நோட்டீஸை நாயக்கரு மாமங்கிட்ட குடித்துடு.  அவசரத்துக்கு எதாவது உதவிண்ணா அவிகள கூப்பிட்டுக்கு வாரல்ல...

115 MBC/DNT சமூக மாணவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு

தமிழக கல்லூரிகளில்  இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், மருத்துவப் படிப்புகள், பொறியியல் படிப்புகள்  மற்ற தொழில் படிப்புகளில் நீங்கள் பெற்றிருக்கும் தகுதி மதிப்பெண் அடிப்படையில்  MBC/DNT இடஒதுக்கீட்டை பிரிக்காமல் 20% முழுவதுமாக செயல்படுத்தி இருந்தால் கிடைத்திருக்க வேண்டிய இடம் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சார்பாக நீதிமன்றத்தை அணுகி நீங்கள் விரும்பிய பாடத்தில் நீங்கள் சேர்ந்து படிப்பதற்கு நீதிமன்றம் மூலமாக உத்தரவு பெற்றுத் தருவதற்கு வழக்கு உள்பட அனைத்து செலவுகளையும் சமூகநீதி கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு உங்களுக்காக உதவி செய்வதற்கு தயாராக உள்ளது. பட்டப்படிப்பு மட்டும்தானே நடந்துள்ளது, இன்னும் மருத்துவ சேர்க்கையோ பொறியியல் சேர்க்கையோ நடக்கவில்லை என்று மெத்தனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கல்லூரிப் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் உடனே தொடர்பு கொண்டால் அது மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கை மாணவர்களுக்கு சிரமமில்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொண்டு உடனடியாக உறவுகள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

join4socialjustice@gmail.com இந்த மெயிலில் விபரங்களை அனுப்பவும்.

சமூகநீதிக் கூட்டமைப்பு

7010592827, 9842155099, 9865114446, 9994261233, 8610010230, 9487367214, 9443725367 9884745474, 9443294892, 9380153090, 9345526696, 9597302707, 9789098186, 9976323239

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved