🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ம.பொ.சி.விருதுபெரும் நல்லாசிரியருக்கு வாழ்த்துகள்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை தன் வாழ்நாளெல்லாம் பரப்பி வந்தவரும், மாவீரன் மீதான எதிரிகளின் விமர்சனங்களுக்கெல்லாம்  தக்கபதிலடி கொடுத்தவருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள். விடுதலைப்போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், எனது போராட்டம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்ய போராடியவர், திருத்தணியை தமிழகத்தோடு சேர்த்ததில் பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. 1995-இல் மறைந்த ம.பொ.சி அவர்களின் 26-வது நினைவுநாள் அக்டோபர்'03-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

அவரின் நினைவையோட்டி சிலம்புச்செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் ம.பொ.சி விருது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான ம.பொ.சி விருதுக்கு  த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாநில தலைவரும், நல்லாசிரியருமான சங்கரவேலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு அக்டோபர்'03-ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெறும் விழாவிற்கு  தலைமையேற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதினை வழங்குகிறார் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை. ம.பொ.சி விருது பெரும் நல்லாசிரியர் சங்கரவேலு அவர்களுக்கு சென்னை, வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved