🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இறுதிவரை உறுதி! வழிக்குக் கொண்டுவந்த வலசை மக்கள்!

திருநெல்வேலியில் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட காடனேரி ஊராட்சியில் உள்ள வலசை கிராமத்தில் சுதந்திரம் பெற்றதிலிருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அக்கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு வந்த வாக்குச்சாவடியில் இதுவரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவந்தனர்.

ஆனால் தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியை அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே இருதரப்பினருக்குமிடையே சாதிய மோதல்கள் இருந்து வரும்நிலையில்,  புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்லும் சாலை குறுகளானதாக உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக இல்லை என்பதும்,  ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருவின் வழியாக பொதுமக்கள் செல்லவேண்டியிருப்பதால் தற்பொழுது நிலவி வரும் அமைதி முற்றிலும் சீர்குழைந்து இருதரப்புக்குமிடையே மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கும் என்பதும் பொதுமக்களின் அச்சமாக உள்ளது.

ஆனால் அதிகாரிகள் மக்களின் கருத்துகளை பொருட்படுத்தால் ஆக்டோபர் 06 -ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை புதிய வாக்குச்சாவடியிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 

ஆனால் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் பிற சமுதாயத்தினர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே ஏற்கனவே பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த பொதுமக்கள் தற்பொழுது ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததோடு சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தையில் மக்கள் தொடங்கினர். 

கிராம மக்களின் எதிர்ப்பு நீர்த்துப்போகும் என்று அதிகாரிகள் நம்பிய நிலையில் மக்கள் புதிய போராட்டத்தை கையிலெடுத்துள்ளதால் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். 

உடனடியாக உண்ணாவிரத இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.

இறுதியாக அடுத்தமுறையிலிருந்து மீண்டும் பழைய வாக்குச்சாவடியிலேயே மீண்டும் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் உண்ணாவிர போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.  இருந்தபொழும் இந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். 

அமைதியான முறையில் உறுதியாக இருந்து தங்கள் கோரிக்கையை வென்றெடுத்த வலசை மக்களுக்கு வாழ்த்துகள். 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved