🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சர் பெருமக்களே வருக! மாவீரனுக்கு வீரவணக்கம் செய்க!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் வருகின்ற அக்டோபர்'16 அன்று அவர் தூக்கிலடப்பட்ட கயத்தாரில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்களும், சமுதாய அமைப்பின் தலைவர்களும் கலந்துகொண்டு மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்தவுள்ளனர்.


இதை முன்னிட்டு தமிழ் நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் சமுதாய அமைப்பை சார்ந்த தலைவர்கள், ஆகியோரை சந்தித்து நினைவு நாள் அனுசரிப்பு விழாவில் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்களை புதூர் கிழக்கு ஒன்றியச்செயலாளர் செல்வராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பண்பாட்டு கழக மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமையிலான குழுவினர் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதனையடுத்து மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்த குழுவினரிடம், மாவீரன் கட்டபொம்மன் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், நான் தவறாமல் கலந்து கொள்வேன் என்றும் உறுதி அளித்தார். இதேபோல் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகயா அவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்வில் மல்லுச்சாமி, சரவணப் பெருமாள், விடிஆர். ராமலிங்கம், ஜெயராமன், மற்றும் பண்பாட்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி (அமைச்சரை சந்திப்பதற்கான) ஏற்பாட்டினை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி வெயில் ராஜ் அவர்கள் செய்து இருந்தார்.

தகவல் உதவி: மாரிச்சாமி, பாளையங்கோட்டை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved