🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விருதுநகரில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் விடுதலைக்களம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் செங்குளம் கிராமத்தில் பொது இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்குமேலான பழமை வாய்ந்த இக்கோவிலில் தொட்டிய நாயக்கர்,வண்ணார்,நாவிதர் ஆச்சாரி உள்ளிட்ட சமுதாயத்தினர் காலம்காலமாக வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோயில் முன்பு பீடம் அமைக்க ஊர்பொதுமக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுவந்தனர். பொதுமக்களின் இந்த முடிவிற்கு எதிராக அக்கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து, தற்பொழுது வெளியூரில் குடியிருப்பவர் அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். இதனையடுத்து இப்பிரச்சினையில் தலையிட்ட அதிகாரிகள் பீடம் அமைக்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டனர்.அதிகாரிகளின் இந்தப்போக்கை கண்டித்து கடந்த செப்டம்பர்'20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நூற்றுக்குமேற்பட்டோர் ஒன்றுதிரண்டு மனு அளித்தனர்.


இம்மனுமீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு,  பீடம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்தப்போக்கைக் கண்டித்து வரும் அக்டோபர் 18-ஆம் தேதி திங்கள்கிழமை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விடுதலைக்களம் கட்சி அறிவித்துள்ளது.விடுதலைகளம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெறும் இந்த முற்றுகைப்போராட்டத்தை, நாமக்கல் வழக்கறிஞர் நல்விணை விஸ்வராஜு அவர்கள் தொடங்கி வைக்கின்றார். அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளும் இப்போராட்டத்தில், செங்குளம் கிராம மக்களுக்கு ஆதராவக சுற்றுகிராம மக்களும் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது. 


இப்போராட்டத்தை தொடங்கி வைக்கும் வழக்கறிஞர் நல்விணை விஸ்வராஜு அவர்கள், ஏற்கனவே கடந்த மாதம் ஈரோடு மாவட்டம், பெரியபுலியூர் கிராமத்தில், கம்பளத்தாருக்கு சொந்தமான 300 ஆண்டுகள் பழமையான முன்னோர்களை  வழிபாடு செய்யும் 21/2 ஏக்கர் மாலாகோவில் நிலத்தை, சிலர் அரசுஅதிகாரிகள் துணைகொண்டு ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதைக்கண்டித்து, விடுதலைக்களம் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு மண்டையை பிளக்கும் உச்சிவெயிலில் நடு ரோட்டில் நின்றுகொண்டு அரசு அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துப்பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தைத்தொடர்ந்து அம்மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு கம்பளத்தாரின் உரிமை நிலைநாட்டப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved