🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துணிந்தார்.... நின்றார்.... வென்றார்! - புவனேஸ்வரி பாண்டியன் அமோக வெற்றி!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலோடு சேர்த்து பிற மாவட்டங்களில் காலியாகவுள்ள ஊராக உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 5-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தொழிற்சங்கவாதி பாண்டியன் அவர்களின் மனைவி புவனேஸ்வரி அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். "பெல்"நிறுவன தொழிற்சங்கவாதியும், சிறந்த பேச்சாளருமான பாண்டியன் விடுதலைக்களம் அமைப்பின் முன்னனி தலைவராக செயல்பட்டதால் சமுதாய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தான் சார்ந்த சமுதாயத்தின் ஒரு சில பத்து வாக்குகள்கூட இல்லாத , வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமுள்ள இடத்தில், தனது துணைவியாரை துணிந்து களமிறக்கியதால் கம்பளத்தார்கள் மத்தியில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது. 

இதற்கிடையே தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முன்னனி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே அனைத்து பகுதிகளிலும் ஆளும்கட்சியான திமுகவின் ஆதிக்கமே நிலவயது. அதேநிலை இராணிப்பேட்டை மாவட்டத்திலும் நீடித்தாலும், ஒருசில இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னிலை பெற்றது. இதனால் திருமதி பாண்டியனின் வெற்றியை தெரிந்துகொள்ள காலை முதலே சமுதாய தலைவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலமாக விசாரித்த வண்ணம் இருந்தனர். அனைத்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி பாண்டியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 700 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

பதிவான வாக்குகளில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி பாண்டியன் 1902 வாக்குகளும், பாமக வேட்பாளர் 1200 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 700 வாக்குகளும் பெற்றனர். வெற்றிபெற்ற புவனேஸ்வரி பண்டியனுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், போடி.சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும், புதூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஈச்சனாரி மகாலிங்கம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே சமுதாய வாக்கு மெஜாரிட்டி இல்லை என்ற காரணத்தைக்கூறி அர்சியல்கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயங்கிவருவதை பல இடங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் அரசியலில் வெற்றிபெற சமுதாய வாக்குகள் மட்டுமே போதுமானதல்ல, அதைத்தாண்டி பிற திறமைகளை வளர்த்துக்கொண்டால்  எந்த இடத்திலும் நின்று வெற்றிபெறலாம் என்பதை புவனேஸ்வரி அவர்களின் வெற்றி மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளார் பாண்டியன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved