🔴 LIVE | முப்பெரும் விழா 2023


களைகட்டத்தொடங்கியது வீரவணக்கநாள்! ஆர்ப்பரிக்கும் கம்பளத்தார் கூட்டம்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவுநாள் நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியுடன்  அனுசரிக்க தமிழகம் முழுவது ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவீரன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாரில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும்,  மாநில அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி அவர்கள் கலந்துகொள்வார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்ட வீ.க.பொ.பண்பாட்டுக்கழக தலைவர் வலசை கண்ணன் அம்மாவட்ட அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உருப்பினர் சண்முகையா, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.இராஜூ ஆகியோரை நேரடியாக சந்தித்து நினைவஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கவும், கயத்தாறு நிகழ்ச்சிக்கு வருகைதரும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் வரவேற்க வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுகள் அறக்கட்டளையினர் தயாராகி வருகின்றனர்.


இதேபோல் மதுரையிலுள்ள மாவீரன் சிலைக்கு மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர்,பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன். இதுதவிர திருப்பூர் மாவட்டம் பாரப்பாளயத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாநில அவைத்தலைவர் பி.எஸ்,மணி அவர்களின் தலைமையில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. 


கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள சிலைக்கு ஈச்சனாரி மகாலிங்கம், கவுன்சிலர் மாசிலாமணி, சிவசாமி, சீனிவாசன், செல்வக்குமார், சிவா,கே.டி.மோகன்ராஜ், தர்மபிரகாஷ், குணசேகர், சண்முகம் குமார் உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்களும், ஊர்நாயக்கர் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். கரூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலைக்கு அம்மாவட்டத்திலுள்ள தலைவர்களும், பொதுமக்களும் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், பொம்மக்குட்டை மேட்டில் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு அக்கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன், அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு அனைத்துக்கட்சிப் பிரமுகர்களும், சமுதாய தலைவர்களும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தவுள்ளனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved