🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உற்சாகம் கரைபுரண்டோடிய வீரவணக்கநாள்! தமிழக ரவுண்டப்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது வீரவணக்கநாள் இன்று மிகுந்த எழுச்சியுடன் தமிழகம் எங்கும் விமர்சியாக அனுசரிக்கப்பட்டது. கயத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரைவைகோ கலந்துகொண்டு மாவீரனுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், காங்கிரஸ் கட்சியின் கதிர்வேல் உள்ளிட்ட தலைவர்கள் கயத்தாறு வருகை தந்து புகழ் வணக்கம் செலுத்தினர்.  மதுரையில் உள்ள மாவீரன் சிலைக்கு மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கரூரில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டம் பொம்மக்குட்டை மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் இராசிபுரம் பேருந்துநிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மாவீரனின் திருவுருவப்படத்திற்கு  கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் விடுதலைக்களம் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் காங்கிரஸ் தலைவர் நாகராஜன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் சந்தியமங்கலம் பழைய பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு அம்மாவட்ட அரசியல் கட்சித்தலைவர்களும், சமுதாய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு ஊராட்சி மன்றத் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கல்ந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அதேபோல் சென்னை, போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, அந்தியூர், உடுமலை, காரமடை, பாளையங்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த எழுச்சியுடன் மாவீரன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved