🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்களுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

வன்னியர் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று (09.11.2021) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் 8/2021-ஐ எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதியரசர் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வுமுன்பு தினசரி விசாரணை நடைபெற்று அக்டோபர் 22-ஆம் தேதி வாதங்கள் நிறைவுபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். மனுதாரர்கள் தரப்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் விஜயன், மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், ராகவாச்சாரி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாதிட்டனர். இந்த வழக்கில் வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பாமக சார்பில் இந்தியாவில் புகழ்பெற்ற மூத்தவழக்கறிஞர்கள் ரவி வர்ம குமார், சோமையாஜி, மாசிலாமணி, இராமன் போன்றோர் ஆஜராகி வாதிட்டனர்.

கடந்த 01.11.2021-திங்களன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏழு கேள்விகளை எழுப்பி வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான என்று கூறி 8/2021 சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இத்தீர்ப்பை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பல விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வந்தது. நீதிமன்றம் எழுப்பிய ஏழு கேள்விகளை அடிப்படையாக வைத்து நடைபெற்று வந்தது. இதனால் பல போலியான விசயங்களும், மோசடியான புள்ளி விபரங்களும் பொதுவெளிக்கு வந்தது. இதனால் மேல்முறையீடு செய்தால் 60 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம் எழும்பியது.

இதை சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு செல்லாமல், மக்கள்தொகை புள்ளிவபரங்களை சேகரித்து அனைவருக்கும் சரிசமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எல்லா தரப்பினரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர். ஆனால் வழக்கம்போல் வன்னியருக்கு ஆதரவாக செயல்படுவதையே தலையாய கடைமையாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழக அரசு, வல்லுநர்கள், சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 246 சாதிகளின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர் சமூகநீதிக்கூட்டமைப்பினர்.

தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved