🔴 LIVE | முப்பெரும் விழா 2023


போலி சமூகநீதி பேசுகிறதா திமுக? ஒருசாதிக்கு இடஒதுக்கீடு வழங்க பச்சைப்பொய்களை அடுக்குவது ஏன்?

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமண்றம் ரத்து செய்துள்ள நிலையில், அச்சட்டத்தைக்காப்பாற்ற தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதுபோல் தெரிகிறது. தொட்டிய நாயக்கர், கள்ளர், மறவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், போயர் உள்ளிட்ட 115 சமூகங்கள், இச்சட்டம் தங்கள் சமுதாயத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும், எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறித்திய நிலையிலும், வன்னியர் நலனைக்காப்பதே தங்கள் பிரதான கடையாக நினைக்கும் திமுக அரச, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021-ஆல் பிற சமுதாயங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுவது ஆதாரமற்றது என்றும், இச்சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு எல்லா அதிகாரமும் இருப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாமல் இருந்துவந்த தமிழக அரசு, உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான ஒருசில மணிநேரத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. இச்சட்டத்தால் பிற சமுதாயங்கள் பாதிக்கப்படவில்லை என்று சொல்லும் தமிழக அரசு, தமிழக அரசில் எந்தெந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனைபேர் பணியாற்றி வருகின்றனர் என்ற புள்ளி விபரத்தையோ, இச்சட்டத்தால் பிற சமுதாயங்கள் எப்படி பாதிக்கப்படவில்லை என்று நிரூபிப்பதற்குறிய ஆவணங்களையோ வெளியிடவில்லை. இப்பொழுதும்கூட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் எந்தெந்தெ சமுதாயங்கள் பலன்பெற்றன என்பதை அரசு ஒருநொடியில் சொல்லிவிட முடியும், ஆனால் அதைச்செய்யாமல் வெறுமனே பாதிப்பில்லை  என்று அரசு சொல்லி வருவது "ங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. 

இடஒதுக்கீடு குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாத சமுதாயங்களை ஏமாற்றி, நீதிமன்றத்தின் கண்களில் மண்ணைத்தூவி எப்படியாவது இந்த சட்டத்தை பாதுகாத்து தங்களை வன்னிய மக்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கும் திமுகவிற்கும் கடும் போட்டியே நிலவுவதாக தெரிகிறது. இதன்மூலம் சமூகநீதி பேசும் திமுக வாக்கு வங்கி அரசியலுக்காக, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உரிய நீதியை வழங்காமல், பெரும்பான்மை சாதி வாக்கைப்பெறுவதற்கு முயல்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது,  ஏற்கனவே கட்சிகளில் தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காமல், 40 லட்சம் மக்களை வெறும் ஊறுகாயாக பயன்படுத்தி வரும் கட்சிகள். இடஒதுக்கீடு விசயத்திலும் துரோகம் செய்து மாணவச்செல்வங்களின் கல்வி உரிமையையும் பிடுங்கிவிட துடித்துக்கொண்டு செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved