🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தீபகற்ப கூட்டணி நாயகன் விருப்பாச்சியாரின் நினைவுநாள்! - விடுதலைக்களம் அழைப்பு.

மராத்திய வீரன் துண்டாஜிவாக், கேரளாவின்பழசிராஜா, திப்புவின் கோவை தளபதி ஹாஜிகான்,  மைசூர் கிருட்ணப்பா, சிவகங்கை சின்னமருது,  இராமநாதபுரம் கல்யாணி தேவர்,  ஈரோடு மூதார் சின்னான், மனப்பாறை லட்சுமி நாயக்கர்,  தேவதானப்பட்டி பூசாரி நாயக்கர் ஆகியோரை ஒன்றிணைத்து "தீபகற்ப கூட்டணி" அமைத்து அந்நியப்படைகளை எதிர்த்து போரிட்டு வெற்றிகண்ட மாவீரன். 

நாடுபிடிக்கும் ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த கணவன் முத்துவடுகநாதரையும்,  நாட்டையும் இழந்து கைக்குழந்தையோடு நிற்கதியாய் நின்ற சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கு அண்ணனாய் நின்று அடைக்களம் தந்து, பாலாறு,  பொருத்தலாறு, சிறுமலை, பன்றிமலை, திண்டுக்கல் கோட்டைகளில் போர்ப்பயிற்சி வழங்கி, ஆங்கிலேயரிடம் இழந்த கோட்டையை மீண்டும் மீட்டெடுத்த ஒரே கோட்டை,  அது தென்னாட்டிலுள்ள சிவகங்கைக்கோட்டை என்று காலத்தால் அழியாத வரலாறு படைத்த வீரமங்கை வேலுநாச்சியார்  என அகிலம் போற்றும் சரித்திர நாயகியை உருவாக்கிய விருப்பாச்சி பாளையக்காரர் கோபாலநாயக்கரின்-220 வது நினைவுநாளான நவம்பர் 21-இல் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் விருப்பாச்சி மணிமண்டபத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. அனைவரும் வாரீர்!!!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved