🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கம்பளத்தார் தீவிரம்!

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தமிழகத்தில் 1996-இல் தொடங்கி 2011 தேர்தல் வரை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற்று வந்தது.  அதனையடுத்து 2016-இல் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் நீதிமன்ற உத்தரவின்படி 2019- இல் முதல்கட்டமாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு அக்டோபர் 8,9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. 


இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அநேகமாக டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளன.அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்பமனு பெறுவதை தொடங்கியுள்ளன. 

கோவை மாநகராட்சி 97-வது வார்டில்  திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக போட்டியிட விருப்பமனுவை அக்கட்சியின் 100-வட்டக் கழக செயலாளர் ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் கட்சியின் தேர்தல்பணிக்குழுவிடம் விருப்பமனு அளித்தார். 

இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த கட்சியினர் அந்தத்தக்கட்சிகளின் தேர்தல் பணிக்குழுவிடம் விருப்பமனு அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதுபற்றிய முழுவிபரம் அடுத்துவரும் நாட்களில் முழுமையாக தெரியவரும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved