🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கயத்தாறில் தமிழக ஆளுநர் மாவீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தினை பார்வையிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மதுரை செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தினை பார்வையிட்டார். 


அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி கட்டபொம்மன் தொடர்பான வரலாற்று புகைப்படங்களை ஆளுனர் ஆர்.ரவி பார்வையிட்டார். தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஸ்தூபி கீழே வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனையடுத்து மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள  வருகை பதிவேட்டில் தங்கள் கருத்துகளை பதிவு செய்தார் தமிழக ஆளுநர். தமிழக ஆளுநர் வருகையின்போது  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தமிழக முதல்வராக 2011-2016 வரை மறைந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது கட்டி முடிக்கப்பட்ட மணிமண்டபத்திற்கு தமிழக ஆளுநர் முதல்முறையாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஒருசில மாதங்களே ஆன நிலையில், தனது முதல் வெளியூர் பயணத்தின்பொழுதே மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ள தமிழக ஆளுநர் மற்றும் அவரது துணைவியாருக்கு கம்பளத்தார்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved